செல்வப் பெருந்தகை Vs அண்ணாமலை.. குறுக்கே வந்த சசிகாந்த் செந்தில்! ஐபிஎஸ்க்கு எதிராக வந்த ஐஏஎஸ்..!
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பற்றி குறைகூறும் அண்ணாமலை, நீதி தேவன் மயக்கத்தால் விடுவிக்கப்பட்ட இந்தியாவின் 'Exemplary Rowdy Sheeter' "அமித்ஷா" உள்துறை அமைச்சராக உள்ளது குறித்து வாய்திறப்பாரா? என காங்கிரஸ் எம்பியும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை -திமுக, அண்ணாமலை -அதிமுக என்றிருந்த அரசியல் களம் தற்போது அண்ணாமலை வெர்சஸ் செல்வப் பெருந்தகை என மாறி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பாஜக தலைவர் அண்ணாமலை மோதல் போக்கை கையாண்டு வருகிறார்.

இந்த நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அண்ணாமலை அரசியல் கட்சித் தலைவர்களை மிரட்டி வருவதாக கூறியதோடு, பாஜகவில் உள்ள ரவுடிகள் பட்டியல் மற்றும் அவர்கள் மீது உள்ள பழக்கு விவரங்களை வெளியிட்டார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை செல்வப் பெருந்தகை மீது உள்ள வழக்குகள் குறித்த பட்டியலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்த செல்வப் பெருந்தகை என் வழக்கின் வரலாறு அரைகுறை அண்ணாமலைக்கு தெரியுமா என வீடியோவை வெளியிட்டார். இவ்வாறாக அண்ணாமலை - செல்வப் பெருந்தகை இடையேயான வார்த்தைப் போர் தொடர்ந்து வருவது தமிழக அரசியல் களத்தை சூடாக்கி வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பற்றி குறைகூறும் அண்ணாமலை, நீதி தேவன் மயக்கத்தால் விடுவிக்கப்பட்ட இந்தியாவின் 'Exemplary Rowdy Sheeter' "அமித்ஷா" உள்துறை அமைச்சராக உள்ளது குறித்து வாய்திறப்பாரா? என காங்கிரஸ் எம்பியும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,” பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்கு என்ன விலை என கேட்கும் அதிபுத்திசாலி அண்ணாமலை, ஆருத்ரா மோசடி வழக்கிற்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் பா.ஜ.கவிற்கும் உள்ள தொடர்பு குறித்து கேட்டால் அதற்கு பதிலளிக்க முடியாமல் தனிமனித தாக்குதலை நடத்துகிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பற்றி குறைகூறும் அண்ணாமலை இந்திய குற்றவியல் சட்டத்தில் உள்ள மிக மோசமான பிரிவுகளான, 1. IPC 506- கிரிமினல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள், 2. IPC பிரிவு-153A/1 வீட்டை அழிக்கும் நோக்கத்துடன் தீவைத்தல், வெடிபொருள் பயன்படுத்துதல், சதி செய்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள், 3. IPCபிரிவு-153B/ 2 இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் இனம், மொழி, பிறந்த இடம், வசிப்பிடம் மற்றும் நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுதல், 4. IPC பிரிவு-500 அவதூறுக்கான தண்டனை தொடர்பான குற்றச்சாட்டுகள் , 5. IPC பிரிவு-503/1 குற்றவியல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள்
6. IPC பிரிவு-504/1- அமைதியைக் குலைக்கும் வகையில் வன்முறையை தூண்டும் நோக்கத்துடன் பேசுதல், செயல்படுதல், வேண்டுமென்றே அவமதிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகள், 7. IPC பிரிவு-427 ஐம்பது ரூபாய் அல்லது அதற்கு மேல் இழப்பு அல்லது சேதம் விளைவித்தல், தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள், 8. IPC பிரிவு-499 அவதூறு செய்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள், 9. IPC பிரிவு-188 பொது ஊழியரால் முறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவிற்கு கீழ்ப்படியாமை தொடர்பான குற்றச்சாட்டுகள் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டு, நீதி தேவன் மயக்கத்தால் விடுவிக்கப்பட்ட இந்தியாவின் 'Exemplary Rowdy Sheeter' "அமித்ஷா" உள்துறை அமைச்சராக உள்ளது குறித்து வாய்திறப்பாரா?
பாட்டி வடை சுட்ட கதை சொல்லாமல் ஆருத்ராவிற்கும் பா.ஜ.க மற்றும் அமர்பிராத் ரெட்டி, R.K. சுரேஷ் மற்றும் ரவுடி ஆற்காடு சுரேஷ்'கும் உள்ள தொடர்பு குறித்து பதில் சொல்லுங்க சார். சாவர்க்கர் வழி வந்தவர்களுக்கு காந்திய வழியில் செல்பவர்கள் கிரிமினல்களாகத் தான் தெரிவார்கள்!" என கூறியுள்ளார்.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக?












Click it and Unblock the Notifications