ஜோதிடருக்கு சிறப்பு அதிகாரி பணியா? விஜய்க்கு எதிராக காங்கிரசில் இருந்தும் வந்த குரல்.. போச்சு
சென்னை: விஜய்யின் ஜோதிடர் ரிக்கி ரதன் பண்டிட் தமிழக முதல்வர் விஜய்யின் சிறப்புப் பணி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜோதிடராக இருக்க கூடிய ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேலுக்கு தமிழக அரசில் பணி வழங்கப்பட்டு இருப்பது கடும் விமரசனங்களை ஏற்படுத்தியுள்ளது. இடதுசாரிகள், விசிக கடுமையாக விமர்சித்து இருந்த நிலையில் காங்கிரசும் இந்த விவகாரத்தில் விஜய்க்கு எதிராக குரல் எழுப்பியுள்ளது.
தமிழக முதல்வர் விஜய்யின் சிறப்புப் பணி அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் இன்று வெளியிட்டார். இவர் பிரபல ஜோதிடராகும். மேலும் த.வெ.க. கட்சியில் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார்.

தனது ஆஸ்தான ஜோதிடராக இருக்க கூடிய ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேலுக்கு தமிழக அரசில் பணி வழங்கப்பட்டு இருப்பது கடும் விமரசனங்களை ஏற்படுத்தியுள்ளது. தவெகவிற்கு ஆதரவு அளிக்கக் கூடிய கட்சிகளான இடதுசாரிகள், விசிகவின் ரவிக்குமார் கடுமையாக விமர்சித்து இருந்தனர். விஜய் தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என்றும் அரசியல் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றன.
ஆனால், விஜய் இதுவரை இந்த விவகாரத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியும் விஜய்யின் ஜோதிடர் நியமனத்திற்கு எதிர்பை தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- முதல்வரின் சிறப்பு அதிகாரியாக (OSD) ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலை உடனடி அமலுக்கு நியமித்ததாக கூறப்படும் கடிதத்தின் நகலை மறுபதிவு செய்துள்ளார்.
"ஒரு ஜோதிடருக்கு ஏன் முதல்வரின் சிறப்பு அதிகாரி (OS)D பதவி தேவைப்படுகிறது? யாராவது இதை விளக்க முடியுமா?" என்று குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் தவெகவிற்கு ஆதரவு அளித்த முக்கியமான கட்சியாக உள்ள காங்கிரஸ் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது விஜய்க்கு இந்த பணி நியமனம் பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications