ராகுல் காந்திக்கே பதவி இல்லை.. எங்கள் எம்.பி பதவிகளையும் ராஜினாமா செய்வோம் - திருநாவுக்கரசர் பரபர!
சென்னை : ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துவிட்டார்கள். நாங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வோம் என்று காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி எனக் கூறி, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு உட்பட, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் சத்தியாகிரகம்
மோடி குறித்து கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சத்தியாகிரக போராட்டம் நடத்தும்படி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டு இருந்தது.

காங்கிரஸ் எம்.பிக்கள்
அதன்படி ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கத்தைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, சேலம் உட்பட 69 இடங்களில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் திரளாகக் கலந்து கொண்டனர். மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டத்தில் திருநாவுக்கரசர் எம்.பி., கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாருமே பேச முடியாது
அப்போது பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், "கள்ளம் கபடம் இல்லாத நபராக ராகுல் காந்தி உள்ளார். அதுதான் பிரச்சனை. ராகுல் காந்தி பேசும்போது மோடி அடிக்கடி தண்ணீர் குடித்தார். அவரது கைகள் நடுங்கின. பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக மான நாஷ்ட வழக்கு தொடர்ந்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது இது தான் இந்தியாவில் முதல் முறை. எம்.பி பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்துள்ளனர். பொது மேடையில் பேசியதற்கு மான நாஷ்ட வழக்கு தொடுத்து தண்டனை கொடுத்தால் யாருமே பொது மேடையில் பேச முடியாது.

ராஜினாமா செய்வோம்
இந்த விவகாரத்தில், நியாயம் கிடைக்கும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம். ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துவிட்டார்கள். நாங்கள் மட்டும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து என்ன செய்யப் போகிறோம்? நாங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வோம். பொதுக்கூட்டத்தில் பேசிய சாதாரண பேச்சிற்காக திட்ட மிட்டு பேசியதாக கூறி இது போன்ற ஒரு அவதூறு வழக்கு போடப்பட்டு பதவியை பறித்துள்ளனர். அதுவும் பேசியது கர்நாடகாவில்.. ஆனால் வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இது போன்ற வெறி உணர்ச்சியால் எம்.பி பதவியை பறிப்பது ஜனநாயகம் விரோதம்.

மோடியை வெளியேற்றும் போராட்டம்
இதுபோன்ற ஜனநாயக விரோதத்தை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரக அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காந்தி அகிம்சை வழியிலேயே போராடி பிரிட்டிஷ்காரர்களை வெளியேற்றினார். அதுபோல காங்கிரஸின் இந்த அறவழிப்போராட்டம் மோடியை வெளியேற்றும். அமைதியாக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டால் அதையே பாவம் என்று கூறுகிறார்கள். அகிம்சை போராட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டிய அவசியம் என்ன? ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள நாட்டில் இது போன்று செய்யக்கூடாது. இது சர்வாதிகாரத்தின் உச்சம்" எனத் தெரிவித்தார்.
-
கடைசி பஸ் பிடிக்க போற மாதிரி அவசரப்பட்டது எல்லாம்.. இதுக்குத்தானா? வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்! -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications