திடீர் திருப்பம்.. ரஜினிகாந்த் உடன் காங். எம்பி திருநாவுக்கரசர் சந்திப்பு.. என்ன பேசினார்கள்?
திடீர் திருப்பமாக காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் நடிகர் ரஜினிகாந்த் உடன் சந்திப்பு நடத்தினார்.
சென்னை: திடீர் திருப்பமாக காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் நடிகர் ரஜினிகாந்த் உடன் சந்திப்பு நடத்தினார்.
Recommended Video
தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்த் தன் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் சந்திப்பு நடத்தினார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இந்த கூட்டம் நடந்தது. பல்வேறு விஷயங்கள் குறித்து இதில் பேசப்பட்டது.
2021 தேர்தலுக்கான அரசியல் கூட்டணி குறித்தும் இதில் ஆலோசனை செய்துள்ளனர். தமிழக அரசியலில் கவனம் பெற்று இருக்கும் ரஜினி வரிசையாக பாஜக தலைவர்கள், இஸ்லாமிய மத குருமார்கள் என்று பலரை சந்தித்து வருகிறார்.

சந்தித்தார்
இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் நடிகர் ரஜினிகாந்த் உடன் சந்திப்பு நடத்தினார். போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினி - எம்பி திருநாவுக்கரசர் சந்திப்பு நடந்தது. திருநாவுக்கரசர் - ரஜினிகாந்த் இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல், சினிமாவிற்கு வெளியே ரஜினிக்கு இருக்கும் முக்கியமான் நண்பர்களில் திருநாவுக்கரசர் ஒருவர் ஆவார்.

என்ன காரணம்
ரஜினிகாந்த் உடன் நடந்த சந்திப்பிற்கு என்ன காரணம் என்று திருநாவுக்கரசர் பேட்டி அளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், என்னுடைய பேரன் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் பெறவே நடிகர் ரஜிகாந்தை சந்தித்தேன். நான் தனியாக வரவைல்லை, ரஜினியை நான் குடும்பத்தோடு சந்தித்தேன். ரஜினி உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தது.

அரசியல் இல்லை
ரஜினியுடன் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. அவருக்கு அறிவுரை வழங்க வேண்டியது கிடையாது. அவருக்கு அரசியல் தெரியும். நான் அறிவுரை வழங்க வேண்டிய நிலையில் ரஜினிகாந்த் இல்லை. அவருக்கு தமிழக அரசியல் தெரியும். அவரின் அரசியல் குறித்து அவரே சுயமாக முடிவு எடுப்பார். நான் மரியாதை நிமித்தமாகவே செய்தியாளர்களை இப்போது சந்திக்கிறேன் என்று திருநாவுக்கரசர் பேட்டி அளித்துள்ளார்.

தொடர் சந்திப்பு
முன்னதாக இந்த வருட தொடக்கத்திலும் ரஜினிகாந்த் திருநாவுக்கரசர் உடன் சந்திப்பு நடத்தினார். அப்போது ரஜினிகாந்த், எனக்கு சிலர் காவி வண்ணம் பூச பார்க்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். அதை தொடர்ந்து ரஜினி - திருநாவுக்கரசர் சந்திப்பு நடந்தது. தற்போது மீண்டும் ரஜினியின் அரசியல் வருகை தீவிரமாக விவாதிக்கப்படும் நிலையில், மீண்டும் திருநாவுக்கரசர் - ரஜினி சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications