மேகதாதுவில் அணை கட்டுவோம் என ராகுல் கூறினாரா?.. ஆதாரம் இருக்கா?.. முதல்வருக்கு காங். கேள்வி
சென்னை: மேகதாதுவில் அணை கட்டப்படும் என ராகுல்காந்தி பேசியதாக கூறும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதற்கான ஆதாரம் காட்ட முடியுமா என திருச்சி எம்பியும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார்.
சென்னை விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராகுல்காந்தி தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கூறினார்.
ஆனால் ராகுல்காந்தி தலைவராக நீடிக்க வேண்டும் என்று எம்.பி.க்கள், காங்கிரஸ் முதல்வர்கள் வலியுறுத்தினார்கள். அப்பதவியில் ராகுல்காந்தி தொடர வேண்டும் என்றே விரும்புகிறேன்.

இடைக்காலத் தலைவர்
ராகுல்காந்தி தலைவராக இருக்க வேண்டும் என்பது தான் தொண்டர்களின் கருத்தாகும். மக்களை கவர்ந்து இழுக்கக் கூடிய தலைவராக ராகுல்காந்தி உள்ளார். இடைக்காலத் தலைவரை நியமித்தால் அரங்க கூட்டங்களில் மட்டுமே பேச முடியும்.

பொறுப்பு
ஆனால் அந்த இடைக்காலத் தலைவரால் மக்களை கவர்ந்து மக்கள் கூட்டத்தில் பேச முடியாது. எனவே ராகுல்காந்தியை விட வலிமையான தலைவர் யாரும் இல்லை.
தேர்தல் தோல்விக்கு ராகுல்காந்தி மட்டுமே பொறுப்பாளியாக முடியாது.

சட்டசபை
அந்தந்த மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிக்கு ஒத்துழைக்காதவர்களை ஒதுக்கி வைக்க கூடிய அதிகாரம் ராகுல்காந்திக்கு உள்ளது. எனவே ராகுல்காந்தி ஒதுங்க வேண்டிய அவசியமில்லை.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று ராகுல்காந்தி பேசியதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் கூறியது தவறு.

கண்டனத்துக்குரியது
அவர் பேசியதாக ஏதாவது ஆதாரம் இருந்தால் காட்ட வேண்டும். இந்தியாவில் பழமையான கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் உறுப்பினர்களை வெளிநடப்பு செய்ய வைப்பதோ வெளியேற செய்வதோ கண்டனத்துக்குரியது என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
திமுக புறக்கணிப்பு! மம்தாவின் பெரும் தோல்விக்கு இடையே இன்று இந்தியா கூட்டணி கூட்டம்.. அஜெண்டா என்ன? -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை











Click it and Unblock the Notifications