3 மாநிலங்களில் வெற்றி முகம்...சென்னையில் காங். தொண்டர்கள் கொண்டாட்டம்
சென்னை: 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் மாநிலங்களில் வெற்றி முகம் காட்டி உள்ளதை அடுத்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தெலுங்கானா, மத்தியபிரதேசம், மிசோரம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்தன. இன்று காலை 8 மணியில் இருந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.தெலுங்கானா, மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்தது. பின்னர், பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றது.

தெலுங்கானாவில் ராஷ்ட்ரிய சமிதி கட்சி வெற்றியை தக்க வைத்துக் கொண்டது, அதே போல், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி வெற்றி கனியை பறித்துள்ளது. மற்ற மூன்று மாநிலங்களில், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவிற்கு காங்கிரஸ் பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்ற பிறகு, வெற்றி முகம் காட்டி உள்ளதால், மாநில காங்கிரஸ் அலுவலகங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு திரண்ட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னையில் உள்ள காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினர்.
-
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை!












Click it and Unblock the Notifications