இன்று தமிழ்நாடே திணறப்போகுது..வங்கிகள் முன் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்! அப்படி என்ன செய்தது மத்திய அரசு?
சென்னை: 100 நாள் வேலை திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு சிதைத்து வருவதாக கூறி அதை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் 2005 இல் நிறைவேற்றப்பட்டு கிராமப்புறங்களைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 18 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது சட்டப்படி உரிமையாக்கப்பட்டது. உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் தான் இத்தகைய விரிவான திட்டம் செயலுக்குக் கொண்டு வரப்பட்டது. இது ஒரு வறுமை ஒழிப்பு திட்டமாகும்.

இத்திட்டத்தில் பெரும்பாலும் பயனடைந்தவர்கள் பெண்களும், பட்டியலின மக்களும் ஆவார்கள். இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததோடு மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் ஏழை, எளிய மக்களிடையே பொருளாதார புரட்சி ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தைக் கொண்டு வருவதற்காக தீவிர முயற்சி மேற்கொண்ட அன்னை சோனியா காந்தி அவர்களை கிராமப்புற பெண்கள் இன்றும் பாராட்டி மகிழ்கிறார்கள். ஆனால், இத்திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதால் ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய பா.ஜ.க. அரசு உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. 2021-22 இல் ரூபாய் 98,468 கோடி ஒதுக்கிய நிலையில் 2023-24 நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூபாய் 60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீடான ரூபாய் 73 ஆயிரம் கோடியை விட 18 சதவிகிதம் குறைவாகவும், 2022-23 நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடான ரூபாய் 89 ஆயிரம் கோடி விட 33 சதவிகிதம் குறைவாகவும் இருந்தது. இந்த நிதியாண்டில் 6 மாதங்களில் இந்த திட்டம் 6147 கோடி ரூபாய் தற்போது பற்றாக்குறையில் உள்ளது என்று இணையதளத்தில் ஒன்றிய அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பற்றாக்குறையின் விளைவாக ஆண்டுக்கு சராசரியாக வெறும்17 நாட்கள் வேலை மட்டுமே என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மோடி அரசு அநியாயமான முறையில் குறைவான அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்தகைய நடவடிக்கையானது கிராமப்புற தொழிலாளர்களின் உரிமைகள் மீதான கடுமையான தாக்குதலாகும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 100 நாட்களுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டுமென்றால் ரூபாய் 2.72 லட்சம் கோடி தேவை. ஆனால், தற்போது அதற்குரிய நிதியை ஒதுக்காமல் மாநில அரசுகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு வஞ்சித்து வருகிறது.
தற்போது பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.198 சதவிகிதம் தான். போதுமான நிதியை வழங்குவதற்கு பதிலாக ஒன்றிய அரசு தொடர்ந்து தேவையற்ற நிபந்தனைகளை விதித்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒதுக்கீட்டைக் குறைத்து, கட்டுமானப் பணிகளுக்கு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 100 நாள் வேலைத் திட்டத்தின்படி வேலை கேட்பவர்களுக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டும். அப்படி வேலை வழங்கவில்லை என்றால் அவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென்று சட்டம் கூறுகிறது.
ஆனால், ஒன்றிய அரசு ஒதுக்குகிற நிதி சராசரியாக ஆண்டுக்கு 42 நாட்களுக்குத் தான் வேலை வழங்க முடியும். மீதியுள்ள நாட்களுக்கு வேலை வழங்குவதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. டிசம்பர் 14, 2022 நிலவரப்படி தமிழ்நாடு உள்ளிட்ட 18 மாநிலங்களுக்கு ரூபாய் 4700 கோடி நிதி வழங்காமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதன்மூலம் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் கடந்த காலங்களில் ஏற்பட்ட பலன்களை சிதைத்து வருகிறது.
கொரோனா காலத்தில் கிராமப்புற பொருளாதாரத்தை இத்திட்டம் தான் காப்பாற்றியது. கோடிக்கணக்கான மக்களை பட்டினி கொடுமையிலிருந்து பாதுகாத்தது. முதல் கொரோனா ஊரடங்கின் போது 11 கோடி மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம் வாழ்வாதாரமாக விளங்கியது. நாடு முழுவதும் தற்போது ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ள நிதியின் மூலமாக மொத்த பயனாளிகளான 6.49 கோடி குடும்பங்களில் 10 சதவிகிதத்தினர் மட்டும் தான் 100 நாள் வேலை வாய்ப்பை இதுவரை பெற்றுள்ளனர். மீதியுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதால் கிராமப்புற தொழிலாளர்கள் புலம் பெயர்கிற அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் எந்த நோக்கத்திற்காக 100 நாள் வேலைத் திட்டம் தொடங்கப்பட்டதோ, அத்திட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு படுகொலை செய்து வருகிறது. இத்தகைய கிராமப்புற தொழிலாளர் விரோதப் போக்கை கடைப்பிடித்து, 100 நாள் வேலை திட்டத்தைச் சிதைத்து, சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பாக வருகிற நவம்பர் 15 ஆம் தேதி காலை 11 மணியளவில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
100 நாள் வேலைத் திட்டம் என்பது வறுமையை ஒழிக்க காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்ததாகும். அதை மோடி ஆட்சி புறக்கணிப்பதை எடுத்துக் கூறும் வகையில் மக்களிடம் பரப்புரை மேற்கொள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தயாரித்த துண்டுப் பிரசுரத்தை கிராமப்புற மக்களிடையே விநியோகிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்படி இன்று காலை 11 மணியளவில் அனைத்து வட்டாரங்களில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளார்கள்.
-
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications