Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதுதான் விஜய் இருக்காரே.. ஆப்ஷன் பி.. காங்கிரஸ் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. கடுப்பான திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் கட்சி 2026 சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி விவகாரத்தில் ஆளும் திமுகவிற்கு கடும் நெருக்கடி கொடுக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கிய சில நாட்களிலேயே காங்கிரஸ் அடித்து ஆட தொடங்கி உள்ளது.

முன்பெல்லாம் காங்கிரசுக்கு திமுக தாண்டி பெரிய ஆப்ஷன் இருக்காது. ஒன்று திமுக, இல்லையென்றால் தனித்தே கூட்டணி உருவாக்க வேண்டும். அதிமுக பாஜகவுடன் இருப்பதால் அங்கே செல்ல முடியாது. ஆனால் இப்போது நிலைமையே வேறு.. இப்போது தமிழக வெற்றிக் கழகம் இருக்கிறது.

Congress pushes DMK to brink with its tactics with TVK ahead of 2026 elections

காங்கிரஸ் பிரஷர் போடுகிறது

இதனால் காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு பிரஷர் போடுகிறதோ என்று தோன்றுகிறது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிய சில நாட்களிலேயே அடித்து ஆட தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்திக்கிறார். விஜயிடம் பேசுகிறார். அதேபோல் விஜயை பாராட்டி போஸ்டுகளை செய்கிறார்.

இன்னொரு பக்கம் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தலுக்கான விருப்ப மனுக்களை இப்போதே பெற தொடங்கிவிட்டார். அவர், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது. கட்டணமில்லா விருப்ப மனு படிவத்தினை நாளை முதல் (10.12.2025) வருகிற 15.12.2025 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்திலோ அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலோ பெற்றுக் கொள்ளலாம். நேரடியாக வந்து விருப்ப மனு படிவத்தை பெற இயலாதவர்கள் இந்த https://drive.google.com/drive/folders/1G711MOz3nNkg XGohJKlneblXZx DBaGVh? usp=sharing லிங்க்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் சட்டமன்ற தொகுதியை குறிப்பிட்டு விருப்ப மனு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்தும், தனியாக இணைக்கப்பட வேண்டிய இதர விபரங்களை விருப்ப மனுவுடன் இணைத்தும் இறுதி நாளான 15.12.2025 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், என்று அறிவிப்பும் வெளியிட்டு உள்ளார்.

திமுகவிற்கு காங்கிரஸ் நெருக்கடி

முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை கடந்த 2 நாட்களுக்கு முன் சந்தித்தது காங்கிரஸ் குழு. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் அமைத்த ஐந்து பேர் கொண்ட குழு, கடந்த புதன்கிழமை, திமுக தலைமையகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தது. இதில் ஏஐசிசி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மூத்த தலைவர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை, சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் ஏஐசிசி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ராகுல் காந்தியின் ரைட் ஹேண்ட் போல செயல்படுகிறார் . இவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கம். இவர் ஸ்டாலினை தனியாக சந்தித்துள்ளார். ஸ்டாலினுடன் தனி ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த ஆலோசனையில்தான் அவர் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்துள்ளாராம். திமுக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த ஐவர் குழு சந்திப்பு, மரியாதை நிமித்தமானது எனத் தெரிவிக்கப்பட்டாலும், 2026 சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் குறித்தே முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

காங்கிரஸ் 3 பார்முலா

காங்கிரஸ், மூன்று விதமான பார்முலாக்களை முன்மொழிந்துள்ளது. இதை கேட்டு திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாம். 75 சட்டமன்றத் தொகுதிகள்; அல்லது 40 தொகுதிகளுடன் அமைச்சரவைப் பதவிகள்; அல்லது 30 தொகுதிகளுடன் ஐந்து மாநிலங்களவை இடங்கள்.

இக்கோரிக்கை, தமிழக அரசியலில் நிலைபெறவும், திமுக கூட்டணியின் மூலம் தனது இருப்பைப் பலப்படுத்தவும் காங்கிரஸின் திட்டத்தை வெளிப்படுத்துகிறது. 75 தொகுதிகள் காங்கிரஸை முக்கிய காட்சியாகும் அல்லது 40 தொகுதிகள் மற்றும் அமைச்சரவைப் பதவிகள் சட்டமன்ற, நிர்வாக அதிகாரங்களைச் சமநிலைப்படுத்தும். திமுக பெரிய எண்ணிக்கையை மறுக்கும் பட்சத்தில், 30 தொகுதிகளுடன் 5 மாநிலங்களவை இடங்கள் மாற்றுத் திட்டமாகும்.

திமுக தலைவர்கள் இக்கோரிக்கைகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் திமுக தலைவர்கள் யாருக்கும் மேற்கண்ட 3 பார்முலாவிலும் விருப்பம் இல்லை. 75 தொகுதிகள் வழங்குவது காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தைப் பலவீனப்படுத்தும் என்று சிலர் கருத, அதிக இடம் கொடுத்தால் நாம் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்று நினைக்கிறார்கள். இக்கோரிக்கைகள், கூட்டணி இத்தகைய அழுத்தத்தில் நீடிக்குமா என்ற விவாதங்களைத் தூண்டிவிட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+