Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்க அண்ணனுக்காக..புன்னகைத்த ராகுல்! பூரித்து போன முதல்வர் ஸ்டாலின்! கையில் இருந்ததை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்காக வந்த ராகுல் காந்தி செய்த செயல் தான் தற்போது தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. ராகுலின் செயலால் நெகிழ்ந்து போன முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதற்காக தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் சூரியனால் சூடு அதிகமா இல்லை அனல் பறக்க பிரச்சாரம் செய்யும் தலைவர்களின் பேச்சுகளால் சூடு அதிகமா என்ற குழப்பம் மக்களிடையே எழுந்திருக்கிறது.

Congress Rahul Gandhi gives sweets to dmk mk Stalin during Lok Sabha election 2024 campaign

திரும்பும் பக்கமெல்லாம் தேசிய தலைவர்களும் தமிழக தலைவரும் தலைவர்களும் முகாமிட்டு வாக்காளர்களிடம் வாக்குகளை பெற தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். வேட்பாளர்களும் காலை முதல் இரவு வரை இடைவிடாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் முகாம்: பொதுவாக வட மாநிலங்களில் ஒரே மாதிரியாக வாக்குகளை பெறும் தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டில் பலத்த அடி வாங்குவது வழக்கம்தான். அதனால் இந்த தேர்தலில் பல தேசிய கட்சிகளின் கவனம் தமிழகத்தின் பக்கம் திரும்பி இருக்கிறது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி நான்கு மாதங்களில் ஏழு முறை தமிழகத்திற்கு பயணம் செய்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்களும் தமிழகத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

ராகுல்காந்தி: அந்த வகையில் இந்தியா கூட்டணியில் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழகம் பற்றியும் தமிழ்நாடு பற்றியும் தமிழகத்திற்கும் தனக்கும் உள்ள தொடர்பு வெற்றியும் பேசி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இந்த நிலையில் தான் தனது பயணத்தின் போது ராகுல் காந்தி செய்த செயலும் அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதிலும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராகுலின் செயல்: இந்தியாவில் மிகவும் தெரிந்த முகமான ராகுல் காந்தி தனது நீதி யாத்திரையின் போது பொதுமக்களிடம் நடந்து கொண்ட விதம் பலரையும் கவனிக்க வைத்தது. அதேபோல்தான் நேற்று மிக எளிமையாக மக்களோடு மக்களாக ராகுல் காந்தி பழகினார். கேரளாவில் இருந்து நேற்று நண்பகலில் நெல்லை வந்த ராகுல் காந்தி அங்கு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வாக்குத் திரட்டினார். பின்பு மீண்டும் கேரளா சென்றவர் மாலையில் கோயம்புத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்தார். கோவை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட ராகுல் காந்தி வழியில் சிங்காநல்லூர் பகுதியில் திடீரென காரை நிறுத்தினார்.

இன்ப அதிர்ச்சி: இதனால் அவரது பாதுகாவலர்களும் பொதுமக்களும் திடீர் பரபரப்பு அடைந்த நிலையில் காரை விட்டு இறங்கிய ராகுல் சென்டர் மீடியனை தாண்டி குதித்து அருகில் இருந்த இனிப்பு கடைக்குள் சென்றார். இதை பார்த்ததும் கடையில் இருந்த பணியாளர்களும் கடை உரிமையாளரும் இன்ப அதிர்ச்சி அடைந்த நிலையில் அவர்களோடு வெகு சகஜமாக பழகிய அவர் கடையில் சில இனிப்புகளை வாங்கி ருசி பார்த்தார். பின்பு அங்கிருந்த ஊழியர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட அவர் அங்கிருந்து நிகழ்ச்சி நடந்த பொதுக்கூட்ட மேடைக்குச் சென்றார்.

முதல்வருக்கு இனிப்பு: கடையில் இருந்த போது எனது அண்ணன் ஸ்டாலினுக்கு எனக்கூறி இனிப்புகள் சிலவற்றையும் ராகுல் காந்தி வாங்கி இருந்தார். பொதுக்கூட்டம் நடக்கும் மேடைக்குச் சென்ற ராகுல் காந்தி தான் வாங்கிய இனிப்புகளை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து வாழ்த்துக்களை கூறினார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் ஸ்டாலினும் எனக்காகவா வாங்கிட்டு வந்தீங்க என மகிழ்ச்சியுடன் கூறி அதனை பெற்றுக் கொண்டார்.

முதல்வர் நன்றி: தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினும் இதற்கு நன்றி தெரிவித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்! என் சகோதரனின் இனிமையான செயலால் மகிழ்ந்தேன்.. ஜூன் 4 ஆம் தேதி, #இந்தியா நிச்சயம் அவருக்கு இனிப்பான வெற்றியை அளிக்கும்!" என பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+