இதுதான் ஆர்எஸ்எஸ்ஸாம்! தேசியக்கொடி ஏற்றியவர்கள் மீதே வழக்கு! வாழ்த்தோடு சீண்டிய காங்கிரஸ்.. ஏன்?
சென்னை: ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசியக்கொடி ஏற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, ஆர்எஸ்எஸ் தொடர்ந்து தேசியக்கொடியை புறக்கணித்து வருவதாக கேரளா மாநில காங்கிரஸ் கட்சியினர் சீண்டியுள்ளனர். இது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.
நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். அதேபால் தமிழ்நாட்டில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி பேசினார்.

அதேபோல் பிற மாநிலங்களிலும் முதல்வர்கள் தேசியக்கொடி ஏற்றினர். இதுதவிர பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் இன்று தேசியக்கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக பொதுமக்கள் தங்களின் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும். வலைதள பக்கங்களில் முகப்பு படத்தை தேசியக்கொடியாக மாற்ற வேண்டும் என கூறியிருந்தார்.
அதனை ஏற்று சுதந்திர தினமான இன்று பலரும் தங்களின் வீடு, கடைகளின் முன்பு தேசியக்கொடி ஏற்றினர். அதோடு சமூக வலைதளங்களின் முகப்பு பக்கங்களிலும் தேசியக்கொடி ஏற்றினார். கடந்த ஆண்டும் பிரதமர் மோடி வீடுகளில் கொடியேற்ற கூறியிருந்தார். அப்போதும் பல தலைவர்கள் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் ஏன் தேசியக்கொடி ஏற்றப்படுவது இல்லை? எனக்கூறி கேள்வி எழுப்பினர்.
அதேபால் சுதந்திர தினமான இன்று கேரளா காங்கிரஸ் கட்சி ஆர்எஸ்எஸ் அமைப்பை சீண்டியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசியக்கொடி என்பது ஏற்றப்படுவது இல்லை. இந்நிலையில் தான் இன்று கேரளா காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தித்தாளில் வந்த செய்தியை பகிர்ந்துள்ளதோடு, ‛‛நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் இந்திய தேசியக்கொடியை ஏற்றியதன் 21வது ஆண்டு விழாவுக்கான வாழ்த்துகள்'' என தெரிவித்து சீண்டியுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அந்த பதிவில் ஒரு செய்தியையும் ஸ்கீரின்ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளது.
அந்த செய்தியின் சாராம்சம் என்பது, ‛‛ஆர்எஸ்எஸ் 1947 ஆகஸ்ட் 15ம் தேதி நாக்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கொடி ஏற்றியது. அதன்பிறகு மீண்டும் 1950 ஜனவரி 26ம் தேதி கொடியேற்றியது. இதையடுத்து 1950ம் ஆண்டுக்கு பிறகு ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்படவில்லை. இருப்பினும் ஆர்எஸ்எஸ் நிர்வாகத்தின் எதிர்ப்பை மீறி ஆர்எஸ்எஸ் ஸ்ம்ருதி பவனில் ரஷத்ரபிரேமி யுவா தளத்தை சேர்ந்த 3 பேர் 2001ல் தேசியக்கொடி ஏற்றினர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2013ல் வழக்கு கைவிடப்பட்டது. 2001ல் நடந்த சம்பவத்துக்கு பிறகு கடந்த 2022 ஜனவரி 26ம் தேதி ஆர்எஸ்எஸ் தனது தலைமையகத்தில் தேசியக்கொடி ஏற்றியது'' என உள்ளது.
இந்நிலையில் தான் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் 2002ல் தேசியக்கொடி ஏற்றப்பட்ட நிலையில் 21 ஆண்டுகள் ஆகிறது. அதனை குறிப்பிட்டு தான் கேரளா காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‛‛நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் இந்திய தேசியக்கொடியை ஏற்றியதன் 21வது ஆண்டு விழாவுக்கான வாழ்த்துகள்'' எனக்கூறி சீண்டியுள்ளது. அதாவது ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்படுவது இல்லை. தேசியக்கொடி ஏற்றியவர்கள் மீது வழக்குகள் கூட பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மறைமுகமாக காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. இது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.
-
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
ஆர்எஸ்எஸ் தலைவர் பயணித்த ரயில் பெட்டியில் கல்வீச்சு.. உடைந்து சிதறிய கண்ணாடி.. 2 பேர் அதிரடி கைது -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications