யார் பெரிய தலை? கதர் கட்சியில் ’கை’கலப்பு! 2 ஆக பிரிந்த நிர்வாகிகள்! டெல்லிக்கு சென்ற பஞ்சாயத்து!
சென்னை: மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் கலகம் வெடித்திருக்கிறது. திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட கிரிஷ் சோடங்கர் மோதல் போக்கை கையாண்டு வந்த நிலையில் செல்வப் பெருந்தகை இடையில் புகுந்து கூட்டணியை உறுதி செய்தார். இந்த நிலையில் தொகுதிகள் ஒதுக்கீடு முடிந்த நிலையில் எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை காங்கிரஸ் மேலிடமே முடிவு செய்ய வேண்டும் என கதர் கட்சியின் ஒரு குரூப் கிளம்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சென்று கொண்டு இருந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக மோதல் வெடித்தது.

கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதலான கட்சிகள் வந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என திமுக சொன்னது. அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை காரணம் காட்டி கூடுதல் தொகுதிகள் கேட்டு அடம்பிடித்தது காங்கிரஸ்.
திமுக காங்கிரஸ் கூட்டணி
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் காங்கிரஸ் வென்றது. அதனால் இந்த முறை 40 தொகுதிகளை கேட்டதோடு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட எம்எல்ஏக்களும் எம்பிக்களும் போர்க்கொடி தூக்கியதால் கடைசி வரை பேச்சுவார்த்தை முடியுமா அல்லது உடையுமா? என சென்றது. தொடர்ந்து ப.சிதம்பரம், களத்தில் இறங்கி சோனியா காந்தி மூலமாக கூட்டணியை இறுதி செய்தார்.
கிரிஷ் சோடங்கர்
அதே நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்த கிரிஷ் சோடங்கர் 35 தொகுதிகள் வேண்டுமென அடம் பிடித்தார். ஒரு வழியாக 28 தொகுதிகள் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இருந்தாலும் இந்த விவகாரத்தில் கிரிஸ் சோடங்கருக்கும், செல்வபெருந்தகைக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இதற்கிடையே 28 தொகுதிகள் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற பேச்சுவார்த்தைகள் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்திருக்கிறது.
தொகுதி பங்கீடு சர்ச்சை
அப்போது கூடுதல் தொகுதிகளை கேட்டதால், திமுக தோல்வி அடைய வாய்ப்பு உள்ள தொகுதிகளை நமக்கு தள்ளிவிடலாம் எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறி இருக்கிறார். அதே நேரத்தில் செல்வப் பெருந்தகையின் ஆதரவாளர்கள் திமுகவின் அமைச்சர்கள் பலமாக இருக்கிறார்கள். அதிமுக நிர்வாகிகள் பலவீனமாக இருக்கும் தொகுதிகளில் நாம் போட்டியிட்டால் வெற்றி பெறலாம். எனவே திமுக கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.
கார்த்தி சிதம்பரம்
இதற்கிடையே தனியாக சர்வே நடத்திய கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலை கொடுத்து இருக்கிறார்கள். அந்த பட்டியலை வைத்து தான் கிரிஸ் சோடங்கர் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் செல்வப் பெருந்தகை திமுக கொடுக்கும் தொகுதிகளில் போட்டியிடலாம் என கூறி இருக்கும் நிலையில் இருதரப்பிலும் மோதல் வெடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
டெல்லி காங்கிரஸ்
அதுமட்டுமல்லாமல் முக்கிய தலைவர்கள் பலரும் தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட்டு கேட்டு செல்வப் பெருந்தகையை நெருங்கி வருகின்றனர். இதனால் கிரிஷ் சோடங்கர் தான் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த பஞ்சாயத்து டெல்லி வரை சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications