ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம்
சென்னை: வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் தவெக ஆதவ் அர்ஜுனா, 2 நாட்களில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள் என்று பேசியிருந்த நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, "புதுச்சேரியில் திமுக என்ன ஆளுங்கட்சியா. உங்களுக்கு அங்க எத்தனை எம்எல்ஏக்கள் உள்ளனர். அங்கு காங்கிரஸ் தானே பெரியக்கட்சி. அவர்கள் தானே முதலமைச்சர் வேட்பாளர். கடைசி வரை வேட்புமனுத்தாக்கல் கூட செய்யவில்லை. புதுச்சேரி நாராயணசாமிக்கு திமுகவும், டெல்லி லாபியும் மட்டும் தான் தெரியும். கள அரசியல் அவருக்கு தெரியாது. கண்ணை திறந்தாலும், மூடினாலும் திமுக மட்டும் தான் அவருக்கு தெரியும்.

காங்கிரஸ் படுதோல்வி
2 தேர்தல்களில் காங்கிரஸ் அங்கு படுதோல்வியடைய வைத்தார். 2026 தேர்தலில் நாராயணசாமிக்கு வாய்ப்பே வழங்கவில்லை. திமுக அவரை ஏமாற்றிவிட்டது. பாஜகவுடன் இணைந்து திமுக சூழ்ச்சி செய்து அங்கு காங்கிரஸை ஒழித்தது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் சுயமாக வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர். ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. அவரை பாஜக தான் அனுப்பியது. அதனால் இன்றைக்கு காங்கிரஸ் நடுத்தெருவில் நிற்கிறது.
அடமானம்
அங்கு நாராயணசாமியை போல தமிழ்நாட்டில் ப. சிதம்பரம் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஒட்டு மொத்த பொதுச்செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களும் தவெக வாசல் முன்பு நிற்கிறார்கள். திமுக குதிரை மீது ஏறி கொண்டு மாற்றம் வரக்கூடாது என நினைத்தோம். ராகுல் காந்தியும் விஜய் மீது தான் அன்பு வைத்துள்ளார். ஆனால் இங்குள்ள வயதானவர்கள் பெட்டி வாங்கிக் கொண்டு அடமானம் வைத்துவிட்டனர் என்று காங்கிரஸ் கட்சியினர் புலம்புகிறார்கள்.
தவெகவில் ஐக்கியமாகும் காங்கிரஸ்
இன்னும் 2 நாட்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியமாக போகிறார்கள். பிடிக்காத ஒரு பெண்ணை அழைத்து ரூமில் அடைத்து கட்டாய கல்யாணம் செய்தது போலத்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணியும். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு திமுக மற்றும் டெல்லி இருவரையும் ஒரே நேரத்தில் எதிர்க்கின்ற தலைவர் விஜய் மட்டும் தான். இதே நிலை நீடித்தால் சிதம்பரமும் ஒழிந்து, காங்கிரஸ் கட்சியும் காணாமல் போய்விடும் என்று பேசியிருந்தார்.
பதவியில் இருந்து நீக்கம்
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் செல்வம் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் தன்னை சந்தித்தாக ஆதவ் அர்ஜூனா பேசியிருந்த நிலையில் செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications