புலி வருது கதை நிஜமாச்சே.. காங்கிரஸை விட்டு பாஜகவுக்கு ஓடிப் போன விஜயதாரணி.. அப்படி வசனம் பேசுனாரே!
சென்னை: காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்துவிட்டார் விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணி (விஜயதரணி). ஒவ்வொரு சட்டசபை, லோக்சபா தேர்தலுக்கும் விஜயதாரணி கட்சி மாறுவார் என யூகங்களாக சொல்லப்பட்டதை 2019 லோக்சபா தேர்தலில் உண்மை என பாஜகவுக்கு தாவி நிரூபித்துவிட்டார் விஜயதாரணி.
விளவங்கோடு சட்டசபை தொகுதியில் 3 முறை காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர் விஜயதாரணி. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்தவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையில் பேத்தி விஜயதாரணி.

அதிமுக-தமாகா இடையே ஊசலாடிய விஜயதாரணி: 2016 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்தார் விஜயதாரணி. அவருக்கும் அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவனுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் அவரது மகிளா காங்கிரஸ் தலைவர் பறிக்கப்பட்டது. அந்த சூழ்நிலையில் விஜயதாரணி, அண்ணா திமுகவுக்கு தாவுவார்.. தமிழ் மாநில காங்கிரஸுக்குப் போய்விடுவார் என கூறப்பட்டது. அப்போது ஜெயலலிதாவை நேரில் சந்தித்தும் பேசியிருந்தார் விஜயதாரணி. இதனால் அதிமுக வேட்பாளராகப் போகிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனாலு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக விளவங்கோட்டில் போட்டியிட்டு மீண்டும் வென்றார்.
2021-ல் பரபரப்பை கிளப்பிய விஜயதாரணி: கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போதும் கூட விஜயதாரணி, பாஜகவுக்கு தாவுகிறார் என செய்திகள் பரவின. ஆனால் அப்போது திட்டவட்டமாக மறுத்த விஜயதாரணி, என்னுடைய குழந்தை பருவம் முதலே காங்கிரஸில்தான் இருக்கிறேன். ப.சிதம்பரம் அலுவலகத்தில் ஜூனியராக இருந்தேன். அப்போது தனி கட்சியை நடத்தி வந்தார் சிதம்பரம். அந்த தருணத்தில் கூட ப.சிதம்பரம் கட்சியில் சேராமல் காங்கிரஸில்தான் இருந்தேன். ஒவ்வொரு தேர்தலுக்கு என்னைப் பற்றி இப்படி காங்கிரஸ் உள்ளேயும் தொகுதியை சேர்ந்த எதிர்க்கட்சிகளும் வதந்தி கிளப்புகிறார்கள். நான் காங்கிரஸை விட்டே போகமாட்டேன் என்றார். அந்த தேர்தலிலும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏவானார்.
பதவி கிடைக்காத விரக்தி?: 2021 சட்டசபை தேர்தலுக்கு பின்னர் சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் பதவி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என பலவற்றுக்கும் முட்டி மோதிக் கொண்டே இருந்தார் விஜயதாரணி. ஆனால் அவருக்கு எந்த ஒரு பதவியும் கிடைக்கவில்லை. இதனால் அண்மைகாலமாக விஜயதாரணி, பாஜக பக்கம் போகிறார்; அவருக்கு டெல்லி மேலிடம் சிக்னல் கொடுத்துவிட்டது என கூறப்பட்டது. இதனை திட்டவட்டமாக விஜயதாரணி மறுக்காமலும் இருந்து வந்தார். ஒவ்வொரு தேர்தலின் போதும் யூகங்களாக பேசப்பட்டதை இம்முறை காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவி உண்மை என நிரூபித்தே விட்டார்.. ஆம் புலி வருது கதையாகவே மாறிவிட்டது விஜயதாரணியின் கட்சி தாவல்!
விளவங்கோடும் விஜயதாரணியும்: 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதன் முதலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்ட விஜயதாரணி 43.69% வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிபிஎம் கட்சியின் லீமாரோஸ் 27.17% வாக்குகளைப் பெற்றிருந்தார். 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 2-வது முறையாக மீண்டும் விளவங்கோடு தொகுதியில் களமிறங்கிய விஜயதாரணி, 42.73% வாக்குகளைப் பெற்றார். விளவங்கோடு தொகுதியில் 2-வது இடத்தைப் பெற்ற பாஜக வேட்பாளர் தர்மராஜ் 22.14%
வாக்குகளைப் பெற்றார். 2021 சட்டசபை தேர்தலில் 3-வது முறையாக களத்தை சந்தித்த விஜயதாரணி 52.12% வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ஜெயசீலன் 35.04% வாக்குகளையும் பெற்றார். 2026 சட்டசபை தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கி வெற்றியை விஜயதாரணி அறுவடை செய்வாரா? என்பதை காலம்தான் சொல்லும்.
-
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான் -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக்












Click it and Unblock the Notifications