Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேசிய அரசியலே மாறப்போகுது.. "திமுக மாடலை" கையில் எடுத்த காங்கிரஸ்.. குலுங்கிய தெலுங்கானா.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஹிட் அடித்த திமுகவின் திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக காங்கிரஸ் பிற மாநிலங்களில் அறிவித்து கண்டு வருகிறது.

நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன.

Congress takes DMK route in Telangana Assembly elections manifesto promises

2024 லோக்சபா தேர்தல் குறித்து பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் சில கருத்து கணிப்புகள் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது என்றும் சில கருத்து கணிப்புகள் பாஜகவிற்கு கண்டிப்பாக மிகப்பெரிய மெஜாரிட்டி கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றன.

இந்த லோக்சபா தேர்தலில் சமூக நீதி வாக்குறுதிகள் , இலவச வாக்குறுதிகள் அதிக கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை வழங்குவதை பாஜக தலைவர்கள் பலர் தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். இலவசங்கள் மூலம் மக்கள் பல அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொண்ட நிலையிலும் கூட பாஜக இதை கடுமையாக எதிர்த்து வருகிறது.

அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளை வழங்க கூடாது. இலவசங்களை வழங்கும் கட்சிகளின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜகவை வழக்கறிஞர் அஸ்வினி குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்த திமுக, ரிட் மனு மூலம் தங்களையும் மனுதாரராக சேர்த்துக்கொண்டது. இலவசங்கள் காரணமாக மக்களின் அடிப்படை பொருளாதாரம் உயரும். இதற்கு பொருளாதார ரீதியாக சான்றுகள் உள்ளன, என்று திமுக தரப்பு இந்த வழக்கில் வாதம் வைத்து வருகிறது. அதே சமயம் இலவசங்களை வாக்குறுதிகளாக கொடுப்பதை பாஜகவினர் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இலவசங்கள் காரணமாக ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வெற்றிபெறும் நிலையில்தான் பாஜக இந்த வழக்கை தொடுத்தது.

இலவசங்கள் வாக்குறுதி: இலவசங்கள் மூலம் குஜராத்திலும் ஆம் ஆத்மி வென்றுவிடும் என்ற அச்சத்தில் பாஜக இந்த வழக்கை தொடுத்ததாக கூறப்பட்டது. அதே சமயம் ஆம் ஆத்மியை சமாளிக்க பாஜகவும் இலவச வாக்குறுதிகளை வாரி வழங்கியது. குஜராத் சட்டசபை தேர்தலுக்காக பாஜக "Agresar Gujarat Sankalp Patra 2022" என்ற பெயரில் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது. அதில் இலவச கல்வி கொடுப்போம், பெண்களுக்கு கிண்டர் கார்டன் முதல் பிஜி வரை கல்வி இலவசம் என்று பாஜக வாக்குறுதி கொடுத்தது. அதோடு, இலவச மருத்துவம், இரண்டு இலவச சிலிண்டர்கள், சன்னா குறைந்த விலையில், குறைந்த விலையில் எண்ணெய், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இலவச மின்சார பைக் ஆகியவை வழங்கப்படும் என்று பாஜக அறிவித்தது. தமிழ்நாட்டில் பைக் வழங்கும் திட்டத்தை காப்பி அடித்து பாஜக இந்த வாக்குறுதியை கொடுத்தது.

ஆம் ஆத்மி இலவசம் கொடுக்கிறது என்று சொல்லிவிட்டு பாஜகவும் இலவச வாக்குறுதிகளை வாரி வழங்கியது. அதோடு பிரதமரின் மருத்துவ காப்பீட்டில் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதற்கு பதிலாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பாஜக கூறியது. இதற்கு போட்டியாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளும் இலவச 100 யுனிட் மின்சாரம், 500 ரூபாய் விலையில் சிலிண்டர்கள், பழைய பென்சன் திட்டம், விவசாய கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகளை வெளியிட்டது. இன்னொரு பக்கம் பாஜக, மதவாத அமைப்புகளை கவனிப்போம், ஸ்லீப்பர் செல்களை ஒடுக்குவோம், மதராஸாக்களை கண்காணிப்போம் போன்ற மதவாத வாக்குறுதிகளையும் கூடுதல் கொடுத்தது.

திமுக மாடல்: இதில் தமிழ்நாட்டில் திமுக கொடுத்த சில வாக்குறுதிகள் தேசிய அளவில் பிற மாநிலங்களில் வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்டன. உதாரணமாக கர்நாடகாவில் தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட இலவச பேருந்து வாக்குறுதி, பெண்களுக்கு மாதம் தோறும் 1500 ரூபாய் கொடுப்பது போன்ற வாக்குறுதிகள் கவனம் பெற்றன. தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் இருப்பது போலவே, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற வாக்குறுதி கர்நாடகாவில் அளிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு பகலில் மும்முனை மின்சாரம் 8 மணிநேரம் வழங்கப்படும். கர்நாடகாவின் KSRTC,BMTC பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி போன்றவை தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை.

பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி தமிழ்நாட்டில் ஹிட் அடித்த திட்டம் இதை அப்படியே காங்கிரஸ் கர்நாடகாவில் கொண்டு வந்துள்ளது. முன்னதாக இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் ஆட்சியில் இருந்த பாஜக அரசை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. குடும்ப தலைவிக்கு நிதி கொடுக்கும் திட்டத்தை அங்கேயும் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது.

பிரியங்கா காந்தி இதே திட்டத்தை Har Ghar Laxmi Campaign என்ற பெயரில் 1500 ரூபாயை எல்லா மாதமும் பெண்களுக்கு வழங்குவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். இந்த வாக்குறுதி பெண்களின் வாக்குகளை கவர மிக முக்கியமான காரணமாக அமைந்தது. அங்கே தேர்தலில் காங்கிரசும் வென்றது. தற்போது கர்நாடகாவிலும் இதே வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

தெலுங்கானா: இந்த நிலையில்தான் திமுகவின் இதே வாக்குறுதிகளை தெலுங்கானாவில் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன்படி தெலுங்கானாவுக்கு 6 உத்தரவாதங்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது அதில் மகாலட்சுமி என்ற திட்டத்தின் கீழ்
பெண்களுக்கு மாதம் ₹2,500
எல்பிஜி சிலிண்டர்கள் ₹500
TSRTC இல் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஹிட் அடித்த திமுகவின் திட்டத்தை தேர்தல் வாக்குறுதிகளாக காங்கிரஸ் பிற மாநிலங்களில் அறிவித்து கண்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+