காங்கிரஸ் விவகாரத்தில் திருமாவளவன் தலையிட கூடாது.. பிரவீன் சக்கரவர்த்திக்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர்!
சென்னை: காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தலையிட வேண்டாம் என்று அக்கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். திருமாவளவன், வைகோ உள்ளிட்டோர் கூட்டணி தர்மத்தை மதிக்க வேண்டும் என்று கூறியுள்ள மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்திக்கு ஆதரவாகவும் கருத்து பதிவிட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், ராகுல் காந்தியின் நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்திருந்தார். இதனால் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலக உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் காங்கிரஸ் கட்சி தலைமை தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிரவீன் சக்கரவர்த்தி தமிழக அரசை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலங்களின் கடன் அளவு தொடர்பாக பிரவீன் சக்கரவர்த்தி ஒரு விமர்சனத்தை பதிவிட, அது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், திமுகவுக்கு இது பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இதையடுத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தின. விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் மற்றும் காங்கிரஸ் எம்பி-க்களும் பிரவீன் சக்கரவர்த்தியை விமர்சித்தனர். இந்த நிலையில் கூட்டணியில் உள்ள விசிக, மதிமுக, சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒரு எச்சரிக்கையை கொடுத்துள்ளார்.
அதில், விசிக, மதிமுக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் இந்தியா எதிர்கட்சி தலைவர் அவர்களிடம் "நடவடிக்கை எடுக்க" கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றிய செய்தி படித்தேன். ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது?
தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா? தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை
விசிக எம்பி ரவிக்குமார், மதிமுக எம்பி துரை வைகோ, பெ. சண்முகம், வீரபாண்டியன் ஆகியோரிடம் "உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்" என்று சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா?
கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன. பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல; கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும். ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது.
இது BJP-RSS அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும். இது கட்சி செயல் வீரர்கள் தன்மான உணர்வை தூண்டும். சிபிஐ மற்றும் சிபிஎம் தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும், கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல், அண்ணன் வைகோ மற்றும் திருமாவளவன் கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் "லக்ஷ்மண் ரேகை"யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனம் அல்ல. ஆனால் அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது. கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல என்று பதிவிட்டுள்ளார்.
-
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications