தேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும்.. காங்கிரஸ் திடீர் ஆவேசம்
சென்னை: நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய காங்கிரஸ் கோரிக்கைவிடுத்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக முதல்வர், பிரதமர் ஆகியோரின் டிவிட்டர் அக்கவுண்ட்டை டேக் செய்து, ட்வீட் வெளியிட்டுள்ளது தமிழக காங்கிரஸ்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி இன்று வெளியிட்ட ட்வீட்டுகளில் கூறியிருப்பதை பாருங்கள்:
இலங்கை தமிழர்களின் நாற்பது ஆண்டுகால இன்னல்களை துடைக்க ஒப்பந்தம் கண்டவர் #ராஜீவ்காந்தி. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு, தமிழுக்கு ஆட்சிமொழி தகுதி, வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கபட்டு தமிழர் தாயகபகுதி, வரதராஜ பெருமாள் தலைமையில் தமிழர் ஆட்சி என பல்வேறு உரிமைகளை
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) October 13, 2019
இலங்கை தமிழர்களின் நாற்பது ஆண்டுகால இன்னல்களை துடைக்க ஒப்பந்தம் கண்டவர்#ராஜீவ்காந்தி. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு, தமிழுக்கு ஆட்சிமொழி தகுதி, வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கபட்டு தமிழர் தாயகபகுதி, வரதராஜ பெருமாள் தலைமையில் தமிழர் ஆட்சி என பல்வேறு உரிமைகளை பெற்று தந்தவர் ராஜீவ்காந்தி. இலங்கை தமிழர்களை பாதுகாக்க இந்திய அமைதி காக்கும் படையை அனுப்பியவர் ராஜிவ்காந்தி. இலங்கை தமிழர்களுக்கு பாதுக்காப்பு வழங்கிய இந்திய அமைதி காக்கும் படையை சேர்ந்த 2000 இந்திய வீரர்களை இலங்கை மண்ணில் கோழைத்தனமாக கொன்று குவித்தவர்கள்.
ராஜிவ்காந்தி படுகொலையை நியாயப்படுத்தி, வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சீமானை தேசத்துரோக குற்றத்தின் அடிப்படையில் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். #ArrestSeeman @CMOTamilNadu @PMOIndia @NaamTamilarOrg
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) October 13, 2019
ராஜிவ்காந்தி படுகொலையை நியாயப்படுத்தி, வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சீமானை தேசத்துரோக குற்றத்தின் அடிப்படையில் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு காங்கிரஸ் கட்சி ட்வீட் செய்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பிரச்சார கூட்டத்தில் பேசிய சீமான், ராஜிவ் காந்தி கொலையை நியாயப்படுத்தியது போல வெளியான வீடியோக்கள் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி இதுபோன்ற ட்வீட்டை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
Thaaimaaman seer: சீமான் மகளுக்கு தாய்மாமன் சீர் ஏன்? அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு விளக்கம் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications