கன்னியாகுமரி... அப்பா கோட்டையை தட்டித் தக்க வைக்கும் மகன் .. மீண்டும் தோல்வியை நோக்கி பொன்னார்!
சென்னை: கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட எச் வதந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் வெற்றி பெறுவார் என தந்தி டிவி எக்சிட் போல் தெரிவிக்கிறது. அதாவது விஜய் வசந்தை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தோல்வி அடைய வாய்ப்பிருக்கிறதாம்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எச் வசந்தகுமார் வெற்றி பெற்றார். இதையடுத்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட எச் வசந்தகுமாருக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியது.
இந்த தேர்தலில் வென்று எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.

டெல்லி நாடாளுமன்றம்
இந்த நிலையில் கன்னியாகுமரி மக்களின் பிரதிநிதியாக டெல்லி நாடாளுமன்றம் சென்ற எச் வசந்தகுமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, கடந்த ஆண்டு அவர் மறைந்தார். இதையடுத்து கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

காலியாக உள்ள தொகுதி
இதையடுத்து தமிழகம், கேரளம், புதுவை, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டசபைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அப்போதே காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

விஜய் வசந்த்
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர்கள் விருப்பமனு அளித்தனர். இந்த நிலையில் எச் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்திற்கு சீட் கொடுக்கப்பட்டது. விஜய் வசந்தை எதிர்த்து பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.

பொன்னார்
ஏற்கெனவே நாகர்கோவில் எம்பியாக இருந்த பொன்னாரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பாஜகவினர் மகிழ்ச்சி அடைந்தனர். அது போல் தனது அப்பா குமரி தொகுதிக்கு செய்த நற்செயல்கள் தனக்கு வெற்றி வாய்ப்பை தரும் என்ற நம்பிக்கையில் விஜய் வசந்த் தரப்பு இருந்தது.

பிந்தைய கருத்து கணிப்பு
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நேற்றைய தினம் வெளியானது. இதில் தந்தி டிவி கணிப்பில் கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் வெல்ல வாய்ப்பிருப்பதாக கணித்துள்ளது. அதாவது பொன்னார் 2019-ஐ போல் மீண்டும் தோல்வியை நோக்கி பயணிப்பதாகவே தெரிகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications