இதுக்கெல்லாம் 2024 தேர்தலில் பரிசு இருக்கு! அமலாக்கத்துறை ரெய்டு.. செல்வப்பெருந்தகை விமர்சனம்
சென்னை: தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை திடீர் ரெய்டை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து வருகின்றன. அந்த வகையில் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் இரண்டாவது கூட்டம் இன்று பெங்களூரில் நடைபெறுகிறது. இதில் திமுகவும் பங்கெடுக்கிறது. இந்நிலையில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. கடந்த 1996 முதல் 2001ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது நில அபகரிப்பில் ஈடுபட்டதாக பொன்முடி மீது குற்றச்சாட்டு இருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அமலாக்கத்துறை திடீர் ரெய்டை மேற்கொண்டிருக்கிறது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி மற்றும் விழுப்புரத்தில் உள்ள அவரது வீடுகள் என 5 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. மட்டுமல்லாது இவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது.
ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி இதேபோல அமலாக்கத்துறை திடீரென செந்தில் பலாஜியின் வீட்டில் ரெய்டு நடத்தியது. இதனையடுத்து அன்று இரவே அவரை கைது செய்யவும் முயன்றது. ஆனால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
இருப்பினும், அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர். அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அறிவுறுத்தியது. இது அமலாக்கத்துறைக்கு சாதகமாக அமைந்தது. இந்நிலையில், தற்போது இரண்டாவது ரெய்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை,
"ஆளுநரின் கருத்துகளுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி செயல்பட்டு வருவதால் மத்திய அரசு இப்படியான பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதனை தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதற்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு தக்க பரிசு கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications