லாரி முழுவதும் வெடிமருந்து! சென்னையில் தனியாக நின்றதால் பரபரப்பு! துப்பாக்கி ஏந்திய போலீஸ் குவிப்பு
சென்னை: சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி சக்திவாய்ந்த வெடிமருந்துகளுடன் நின்றது. இதையடுத்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் டோல்கேட் அருகே இன்று காலையில் வழக்கம்போல் வாகனங்கள் சென்று வந்தன. அப்போது அந்த சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

வெள்ளை நிறத்தில் இருந்த லாரியின் நீலநிறத்தில் கண்டெய்னர் இருந்தது. திடீரென்று அந்த கண்டெய்னர் லாரி சாலையில் நின்றது. லாரியை அங்கிருந்து டிரைவரால் இயக்க முடியவில்லை.
இதனால் அந்த லாரி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் துப்பாக்கி ஏந்திய 6 போலீசார் அங்கு வந்து குவிந்தனர். லாரியின் முன்பும், பின்பும் தடுப்புகள் வைக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதுபற்றி விசாரித்தபோது தான் அதிர்ச்சி தகவல் வெளியானது.

அதாவது அந்த கண்டெய்னர் லாரியில் அதிகளவில் வெடிமருந்து இருப்பதாகவும், இதனால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்ட தகவலும் தெரியவந்தது. அதாவது சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் வெடிமருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தான் இந்த கண்டெய்னர் லாரியில் வெடிமருந்து கொண்டு செல்லப்பட்டதாகவும், இந்த லாரி சென்னை துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது பழுது ஏற்பட்டதால் பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்ட விபரமும் தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக மெக்கானிக் அங்கு வரவழைக்கப்பட்டார். அவர் கண்டெய்னர் லாரியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தார். இதையடுத்து வெடிமருந்து இருந்த கண்டயெ்னர் லாரி அங்கிருந்து மணலியில் உள்ள யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் இன்று திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications