ஒப்பந்த ஊழியர்களுக்கு ஜாக்பாட்! புதிய தொழிலாளர் சட்டத்தில் கிராஜுவிட்டி எப்படி கணக்கிடப்படும்? விளக்கம்
சென்னை: புதிய தொழிலாளர் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் ஊழியர்களுக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் இந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் உள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலுக்கு வந்த இந்த புதிய சட்டங்களின் படி, ஒப்பந்த ஊழியர்கள் நிறுவனத்தில் கிராஜுவிட்டி (பணிக்கொடை) வாங்க ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இல்லை.
இனி ஓராண்டு பணியாற்றினாலே கிராஜுட்டியை பெற முடியும். நாட்டில் புழக்கத்தில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து, 4 எளிய சட்டங்களாக மாறியுள்ளது. இதில் தொழிலாளர்களின் ஊதியம், சமூக பாதுகாப்பு, நிறுவனங்களுடனான தொடர்பு, தொழில் பாதுகாப்பு ஆகியவை அடங்கியுள்ளன.

கிராஜுவிட்டி சட்டம்
ஒரு ஊழியர் வேலைவிடும் போது (ராஜினாமா, ஓய்வு, மரணம் அல்லது உடல் ஊனமடைதல் போன்ற காரணங்களால்), நிறுவனத்தால் வழங்கப்படும் சட்டப்பூர்வமான தொகை தான் கிராஜுட்டி. இது இதற்கு முன்பு கிராஜுட்டி சட்டம் 1972 சட்டத்தின் கீழ் இருந்தது. அந்த சட்டப்படி, ஒரு ஊழியர் குறைந்தது 5 ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்திருக்க வேண்டும் என்றால் தான் பணிக்கொடை பெற தகுதி பெறுவார்.
ஒரு ஆண்டு பணிபுரிந்தாலே
நாடு முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பல லட்சம் ஊழியர்களுக்கு இதனால் பணிக்கொடை கிடைப்பதில் பெரும் சிக்கல் இருந்தது. இந்த நிலையில், புதிய மாற்றமாக ஒரு ஆண்டு தொடர்ந்து வேலை செய்தாலே கிராஜுட்டி பெற தகுதி பெறுவார்கள். கிராஜுட்டி தொகை என்பது அவர்கள் வேலை செய்த கால அளவுக்கு ஏற்ப pro rata (அளவிற்கு ஏற்ற வகையில்) கணக்கிடப்படும் 2025 ஆம் ஆண்டு நவம்பருக்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கே இது பொருந்தும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஓராண்டு விதி என்பது அனைவருக்கும் பொருந்தாது. நிரந்தர ஊழியர்கள் கிராஜுட்டி பெற வேண்டும் என்றால் 5 ஆண்டுகள் என்ற விதியை பூர்த்தி செய்து இருக்க வேண்டியது அவசியம். மரணம் அல்லது ஊனம் அடைதல் போன்ற சில நிகழ்வுகளில் மட்டும் இதற்கு விதி விலக்கு உண்டு. அதாவது எளிமையாக சொல்வது என்றால் ஓராண்டில் கிராஜுட்டி என்பது நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேரும் பணியாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
புதிய ஊதிய வரையறையின் படி
ஐடி, உள்கட்டமைப்பு, உற்பத்தி, சில்லறை வர்த்தகம் போன்ற தொழில்களில்தான் பெருமளவில் ஒப்பந்த ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டுமே இங்கு அதிகம் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
புதிய ஒருங்கிணைந்த ஊதிய வரையறையின் படி, மொத்த சம்பளத்தில் குறைந்தது 50% 'ஊதியம்' ஆக இருக்க வேண்டும். அதாவது, பிஎஃப், போனஸ், கிராஜுட்டி போன்ற சட்டப்படி வழங்க வேண்டிய தொகைகளை குறைக்க அதிக அளவில் இதர அலவன்ஸ்களை பயன்படுத்த முடியாது. இதனால், பல நிறுவனங்கள் சம்பள அமைப்பை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். 'ஊதியம்' பகுதி அதிகரிப்பதால், நிறுவனங்களின் சட்டப்பூர்வ செலவுகளும் அதிகரிக்கலாம்.
பணிக்கொடை கணக்கீட்டு முறை
பல ஆண்டுகளாக, இந்திய நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை குறைவாக வைத்துக் கொண்டு இதர அல்லவன்ஸ்களை அதிகமாக சேர்த்து சட்டப்படி வழங்க வேண்டிய தொகைகளை குறைத்து வழங்கின. அடிப்படை சம்பளம் குறைவாக இருந்தவர்களுக்கு இப்போது கிராஜுட்டி தொகை கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. கிராஜுட்டி கணக்கிடும் முறையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதே பார்முலாவே பின்பற்றப்படுகிறது.
பணிக்கொடை கணக்கீட்டு முறை மாறவில்லை: தொகை = கடைசியாகப் பெற்ற ஊதியம் x 15 x சேவை ஆண்டுகள் ÷ 26. (26 என்பது ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து மாதத்தின் சராசரி வேலை நாட்கள்). தனியார் துறை ஊழியர்களுக்கான பணிக்கொடை ₹20 லட்சம் எனக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications