ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் என்னை..3வது திருமணம்! அன்னபூரணி rocked பக்தர்கள் shocked! திருமண கேலரி
சென்னை: ஆதிபராசக்தியின் அவதாரம் என தன்னைத் தானே கூறிக் கொள்ளும் பிரபல பெண் சாமியார் அன்னபூரணி அரசு அம்மா மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் திருமணம் செய்து கொண்டது தவறில்லை. ஆனால் அவர் திருமணம் செய்து கொண்டிருக்கும் நபர் சிவனின் அவதாரம் என்றும் தங்களை அம்மையப்பர் என்று அழைக்க வேண்டும் எனக் கூறியதோடு ஆசி பெற வர வேண்டும் என அழைத்துள்ளது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் பிரபலம் ஆன அன்னபூரணி அரசு அம்மா எனும் பெண் சாமியார், தன்னை ஆதிபராசக்தியின் அடுத்த உருவம் என கூறி வருவதுடன், அவ்வபோது பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் அட்வைஸ் கொடுத்து பக்தி பரவசத்தில் ஆழ்த்தி வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், திடீரென சாமியார் அவதாரம் எடுத்தார். அப்போது முதல் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டும் அதனை கண்டு கொள்ளாமல், ஆன்மீக சேவை ஆற்றி வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் "அன்னபூரணி அரசு அம்மன்" என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார் அன்னபூரணி. தன்னை கடவுளின் அவதாரம் என்று சொல்லிக்கொண்டு அன்னபூரணி அரசு அம்மனாக தன்னை மாற்றிக்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு தனது கணவர் மற்றும் 14 வயது பெண் குழந்தையை பிரிந்துவிட்டு காதலரான அரசு என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

இதில் சில நாட்களில் அரசுவும் உயிரிழந்து விட்டதால், அவரது நினைவாக அரசுவின் உருவ சிலையை வடிவமைத்து கடவுளாக வழிபட்டு வந்தார். இதன் பிறகு தான் செங்கல்பட்டில் அன்னபூரணி அரசு அம்மன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தினார். மேலும் தன்னை கடவுள் என்று கூறி பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி வந்தார். இது சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது ஒரு புறம் இருக்க கடந்த சில நாட்களாக செங்கல்பட்டு திருவண்ணாமலை போன்ற இடங்களில் ஆசிரமம் அமைத்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார் அன்னபூரணி அரசு அம்மா. கடந்த சில நாட்களாக அவரை யாரும் கண்டு கொள்ளாத நிலையில் திடீரென தான் மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார். மேலும் ரோகித் என்பவரது புகைப்படங்களை வெளியிட்டு இவர் தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர் எனவும் நேற்று திருமணம் நடைபெறும் எனவும் அறிவித்தார்.

இதை அடுத்து சிலர் அந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். தற்போது அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார் அன்னபூரணி அரசு அம்மா. அது மட்டும் அல்லாமல் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட நபர் சிவனின் அவதாரம் எனவும். தங்களை அம்மை - அப்பர் என்று அழைக்க வேண்டும் என கூறி பக்தர்களை அதிர வைத்திருக்கிறார் .

ஒருவர் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அது அவருக்கு தனிப்பட்ட உரிமை .தன்னைத்தானே சுவாமியின் அவதாரம் எனக் கூறிக் கொள்வதோடு தன்னை திருமணம் செய்து கொள்பவர்கள் அனைவருமே சுவாமியின் அவதாரம் அவர்களையும் வணங்க வேண்டும் என கூறுவது எப்படி என கேள்வி எழுப்பும் முற்போக்காளர்களும், பக்தர்களும்.. இதுபோன்ற போலி சாமியார்களிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர். இதற்கிடையே அன்னபூரணி அரசு அம்மா பகிர்ந்த திருமண புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

-
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications