Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாப்பில் "அன்னபூரணி".. பாபாவுக்கே டஃப் கொடுத்து.. 2021-ல் பரபரப்பை கூட்டிய சர்ச்சை சாமியார்கள்..!

பெண் சாமியார் அன்னபூரணி விவகாரம் இந்த வருடம் மறக்க முடியாத பரபரப்பை ஏற்படுத்திவிட்டது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வருடம் அரசியலில் ஏற்படுத்திய சர்ச்சைகளைவிட, திடீர் திடீரென முளைத்த சாமியார்கள் ஏற்படுத்திய சர்ச்சைகள்தான் அதிகம்.. அந்த வகையில் சில சாமியார்கள் இந்த வருடமும் டிரெண்ட் ஆனார்கள்.

Recommended Video

    Commissioner office-ல் பெண் சாமியார் அன்னபூரணி புகார் | Oneindia Tamil

    மனித குலம் தோன்றியதில் இருந்தே போலி சாமியார்களும் உருவாகி கொண்டே இருக்கிறார்கள்.. இவர்களின் எண்ணிக்கை பெருகி கொண்டே இருக்கிறதே தவிர, அதை கட்டுப்படுத்த முடியவில்லை.

    நாளுக்கு நாள் பலவித சிக்கலில் தவித்து கிடக்கும் மக்கள், எங்காவது இதற்கு தீர்வும், பலனும் கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பில், சாமியார்களை நாடி செல்கிறார்கள்..

    வியாபாரம்

    வியாபாரம்

    தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில், அந்த சாமியார் போலி சாமியாரா என்பதை கூட இவர்களால் ஆராய முடிவதில்லை.. இந்த பலவீனங்களைதான், போலி ஆசாமிகள் காசாக்குகிறார்கள்.. வியாபாரம் பார்க்கிறார்கள்.. இந்த போலிகளின் பல முகத்திரைகள் கிழிக்கப்பட்டும்கூட, இவர்களை காவல்துறை கைது செய்வதில்லை.. உரிய தண்டனையை தருவதில்லை.. கண்டும் காணாமல் ஒதுங்கி செல்லும் போக்கை சில மாநிலங்களின் காவல்துறையே கடைப்பிடிப்பது வேதனைக்குரியது.

     நித்தியானந்தா

    நித்தியானந்தா

    சர்ச்சைகளை கிளப்பி அதன்மூலம் தங்களை நிலைநிறுத்தி கொள்ளும் பெரும்பாலான சாமியார்களும் கைதாவதில்லை.. இதற்கு உதாரணம் நித்தியானந்தாவை சொல்லலாம்.. இவரை இதுவரை தப்புவிக்க காரணம் என்னவென்று தெரியவில்லை.. அதேசமயம், இந்த சாமியார்கள் சர்ச்சைகளும் குறையவில்லை.. இந்த வருடத்திலும் இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்தவர் நித்தியானந்தா தான்.. பாலியல் வழக்கு, ஆள் கடத்தல் கருப்புப்பண விவகாரம் என்று பல கேஸ்கள் இவர் மீது இருந்தாலும், தனக்கென ஒரு தனித்தேசத்தை அமைத்து கொண்டார் நித்தியானந்தா.. தன்னை சிவனாக, பெருமாளாக, அலங்கரித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

     சிவசங்கர்

    சிவசங்கர்

    அடுத்ததாக, சிவசங்கர் பாபா இந்த வருடம் சர்ச்சையுடன் சேர்த்து பரபரப்பை கூட்டிய இன்னொரு சாமியார் ஆவார்.. கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் என்ற பள்ளியை நிறுவி நடத்தி வருபவர்.. தன்னை ஒரு கிருஷ்ணர் என்று சொல்லி கொண்டார்.. ஆனால், தன்னுடைய பள்ளியில் பயிலும் மாணவிகளை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதால் சிபிசிஐடி மூலம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ளார்.. இப்போது மாரடைப்பு காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

     மணிகண்டன்

    மணிகண்டன்

    அடுத்ததாக மணிகண்டன்.. நான் கடவுள் படத்தில் ஆர்யா வருவாரே.. அதுபோன்ற அவதாரம் எடுத்தவர்.. திருச்சியை சேர்ந்தவர்.. இவர் அம்மா இறந்துவிட்ட நிலையில், அந்த சடலத்தின் மீதே உட்கார்ந்து மயான பூஜை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்.. இவர் பெண் அகோரி ஒருவரை திருமணம் செய்துகொண்டு ஊரைவிட்டு ஓடிவிட்டார் என்று செய்தி வெளியாகி இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

     கமிஷனர் ஆபீஸ்

    கமிஷனர் ஆபீஸ்

    இதில்பெண் சாமியார்களும் விலக்கல்ல.. இதில் முக்கியமானவர் பவித்ரா ஆவார்.. தஞ்சை பகுதியில் படுபேமஸ் ஆன பெண் சாமியார் இந்த ஸ்ரீபவித்ரா.. கழுத்து நிறைய நகைகள் தொங்கும்.. ஆளுயுர மாலை அணிந்து கொள்வார்.. இப்படியேதான் ஊருக்குள் நடமாடுவார்.. சில மாதங்களுக்கு முன்பு, பெண் சாமியார் கமிஷனர் ஆபீசர் வந்திருந்தார்..

     பவித்ரா

    பவித்ரா

    சில்வர் கலரில் சுடிதார் அணிந்து கொண்டு, கழுத்தில் சிவலிங்கத்தை கற்களால் பதித்த டாலர் செயின், காசு மாலைகளுடன் கமிஷனர் ஆபீசில் நுழைந்த பவித்ராவை பார்த்ததும் அங்கிருந்தோர் சற்று மிரண்டுவிட்டனர்.. உதட்டில் லிப்ஸ்ட்டிக், தலைக்கு பிரவுன் கலரில் ஹேர்கலரிங்கில் வித்தியாசமாக காணப்படுவார்.. வழக்கமாக பெண் சாமியார்கள் என்றால், காவி நிறம் அல்லது சிவப்பு, மஞ்சள் நிற சேலைகளில் எளிமையாக ஆசி தந்து வரும் நிலையில், ஸ்ரீபவித்ராவின் மார்டன் டிரஸ்ஸூம், ஹை ஹீல்சும் பக்தர்கள் பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது..

     அன்னபூரணி

    அன்னபூரணி

    ஆனால் இவரையும் மிஞ்சிவிட்டார் அன்னபூரணி.. பளபளக்கும் பட்டுப்புடவையில், லிப்ஸ்டிக் சகிதம், மலர் மாலை சூடியபடி, இவரது போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டிங் ஆனது.. ஏராளமான பெண்கள், அவரை காண வழி மீது விழி வைத்து காத்திருக்க, திடீரென பக்தர்கள் முன் தோன்றி அருள்பாலித்தார்.. பக்தர்களும், எங்கள் தாயே, அம்மா என்று முழக்கமிட, அன்னபூரணி ஆசி வழங்கினார்..

    பரபரப்பு

    பரபரப்பு

    இந்த வீடியோக்கள் எல்லாம் வெளியாகி பரபரப்பை கிளப்ப, ஒரே நாளில் இந்த பெண் சாமியார் ஃபேமஸ் ஆகி விட்டார். இவர் மீது புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னும் இந்த சர்ச்சை ஓயவில்லை.. ஆக மொத்தம் இந்த வருடம் எத்தனையோ சாமியார்கள் புற்றீசல்போல் முளைத்தாலும், அனைவரையும் அன்னபூரணியின் வருகை அடியோடு சாய்த்து விட்டது என்றே சொல்லலாம்... அதேசமயம், ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டேதான் இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+