அன்று அதிமுக பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவு சர்ச்சை.. இன்று ராமர் கோவில் விழாவுக்கு க்ரீன் சிக்னல்!
சென்னை: அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்கு அதிமுக கரசேவகர்களை அனுப்பியதாக பல்லாண்டுகாலமாக சர்ச்சை நீடித்து வருகிறது. இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்போம்; கால் வலி உள்ளது; வாய்ப்பிருந்தால் பங்கேற்பேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது பேசுபொருளாகி இருக்கிறது.
திராவிட கட்சியாக இருந்தாலும் எம்ஜிஆர் காலத்தில் அதிமுக அரசு, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கொண்டு வர முயற்சித்தது பெரும் சர்ச்சையானது. பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 69% இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றி அரசியல் சாசனப் பாதுகாப்பைப் பெற்று "சமூக நீதி காத்த வீராங்கனையாக" போற்றப்பட்டார்.

பாபர் மசூதி இடிப்பு: அதேநேரத்தில் அயோத்தி பாபர் மசூதி- ராமர் கோவில் சர்ச்சையில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக எப்போதும் பாஜகவின் நிலைப்பாட்டுக்கு இணக்கமான நிலைப்பாட்டையே எடுத்து வந்தது. அயோத்தியில் 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதிமுக கரசேவகர்களை அனுப்பியது என்கிற குற்றச்சாட்டு நீண்டகாலமாக திமுக தரப்பில் முன்வைக்கப்படுகிறது. தேர்தல் பிரசார காலங்களில் மறைந்த தலைவர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும் இது தொடர்பாக கடுமையான விவாதங்களை நடத்தி இருக்கின்றனர். அப்போது பாஜக கூட, அதிமுக கரசேவைக்கு ஆட்களை அனுப்பவே இல்லை என்றெல்லாம் சொன்னது. ஏனெனில் 1992-ம் ஆண்டு தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலில் பேசிய ஜெயலலிதா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இன்னொரு முறை அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவார்களாம்? என்றார். கடந்த 2020-ம் ஆண்டு பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜை நடத்திய போது அதற்கும் கூட வாழ்த்து சொன்னவர்தான் அன்றைய அதிமுக அரசின் முதல்வர் இன்றைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
பாஜக- அதிமுக கூட்டணி முறிவு: தற்போது பாஜகவுடனான கூட்டணியே கிடையாது என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. இதனாலேயே பல்வேறு முஸ்லிம் இயக்கங்கள், கட்சிகள் அதிமுகவை ஆதரிக்கவும் முன்வரவும் தொடங்கி உள்ளன. அதே நேரத்தில் பாஜகவை முற்று முழுதாக முழு வீச்சில் எதிர்க்கக் கூடிய அளவுக்கு அதிமுக உருமாற்றம் பெறவே இல்லை ; அதனால் கூட்டணியை முறித்தது என்பது ஒரு நாடகம் என்கிற சந்தேகப் பார்வையும் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
ராமர் கோவில் திறப்பு: இப்படியான சூழலில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசோ, அயோத்திக்கு செல்ல விரும்பினால் ஏற்பாடு செய்வோம் என்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவோ, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அனைவரும் செல்லலாம்; அனைத்து மதத்தினரும் விரும்பினால் செல்லலாம் என்கிறது. மேலும் தமக்கு காலில் வலி இருக்கிறது; வாய்ப்பிருந்தால் தாமும் அயோத்தி செல்வேன் என்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்வைத்து பாஜக அரசியல் செய்வதாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் கூட்டணியை முறித்துக் கொண்டதாக இடைவிடாமல் சொல்லும் அதிமுக ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு மட்டும் கை கோர்ப்பது இப்போது விவாதத்துக்குரிய பேசு பொருளாகி இருக்கிறது.
-
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications