பிறந்தநாளில் மு.க.ஸ்டாலினை troll செய்தாரா உதயநிதி? கூடி கும்மியடிக்கும் ட்விட்டர் உலகம்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் சிறப்பு செய்வதாக நினைத்து அவரது மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் செய்த செயல்தான் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபி.
திமுக பொதுச்செயலாளரும் தமது பெரியப்பாவுமான பேராசிரியர் அன்பழகன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் தாம் பிறந்த நாளை கொண்டாடவில்லை என ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஆனால் திமுகவினரோ ஸ்டாலின் பிறந்த நாளை விதம்விதமாக கொண்டாடி தீர்த்துவிட்டனர்.

இந்த வரிசையில் தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் ஒருபடத்தை பதிவிட்டிருந்தார். அதில் ஸ்டாலின் முகம் கருப்பு வண்ணத்தாலும் சட்டை சிவப்பு நிறத்தாலும் இருப்பது போன்ற ஒரு முயற்சியை மேற்கொண்டார்.
உதயநிதி செய்ய நினைத்தது என்னவோ நல்ல முயற்சிதான். ஆனால் ஒர்க் அவுட் ஆகாமல் ரிவிட் ஆகிவிட்டது போல. அப்புறம் என்ன வெளுத்துவாங்கிவிட்டனர் ட்விட்டர் உலக குடிமகன்கள்.
@JAYkkCyborg என்ற பதிவர், பிறந்தநாள் கூட பாக்காம அப்பாவ troll பன்னுறீயே என கிண்டலடித்திருக்கிறார்.
@Raamraaj3 என்ற ட்வீட்டிஸ்ட், இது என்னய்யா,பிறந்தநாளூம் அதுவுமா! இப்படி கேவலப்படுத்தி இருக்க என குறிப்பிட்டுள்ளார்.
@jeeva_410 என்ற குசும்பர், Y உங்க daddy மூஞ்சில கரிய பூசியிருக்கீங்க என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
@siva_5253 என்ற நெட்டிசன், குழந்தைகள் யாரும் பார்த்தால் பயந்துவிடப் போகிறார்கள என எழுதியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications