"மசாஜ்.. முத்தம்".. பற்றிக் கொண்டு எரிவது காதலா? கன்டன்ட்டா?.. கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்
பாலாஜியை ஷிவானி நிஜமாகவே காதலிப்பது போல தெரிகிறது
சென்னை: "லவ் பண்ணுவதில்கூட போலியா இருக்காரே.. இதுல கூடவா கண்டன்ட் பார்ப்பது?" என்று பாலாஜியை கிழித்து தொங்கவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்!
வழக்கமாக பிக் பாஸ் வீட்டில் காதல் என்ற பேச்சு அடிபடுவது இயல்புதான்.. சம்பந்தப்பட்டவர்கள் முன்னே பின்னே பார்த்தது இல்லை என்றாலும்கூட, பிக்பாஸ் வீட்டின் சூழலும், ஒரே இடத்தில் ஒருவரையொருவர் சார்ந்து இருப்பதற்கான சூழலுமே காதலை அரும்ப வைத்துவிடுகிறது.

அந்த வகையில், ஒவ்வொரு சீசனிலும் லவ் ஜோடி யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.. இதில் பெருமளவு தாக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது கவின் - லாஸ்லியாதான்!
இதுபோன்ற காதலர்களுக்கென்று பிக்பாஸ் வீட்டில் ஒரு ஸ்பெஷல் இடமும் உள்ளது.. இந்த முறை அந்த வகையில் ஒரு ஜோடி சிக்கி உள்ளது.. பாலாஜி - ஷிவானி ஜோடியானது காதலில் விழுந்துவிட்டதா? இல்லையா என்பது தெரியாமலேயே குத்துமதிப்பாக நகர்ந்து வருகிறது.
அதிலும், ஷிவானியின் மடியில் பாலாஜி படுப்பதும், அவருக்கு ஷிவானி மசாஜ் செய்வதும், ஸ்பூனில் சாப்பாடு ஊட்டிவிடுவதும் என படு சின்சியராக இருக்கிறார்.. எந்நேரமும் பாலாஜியை ஒட்டிக் கொண்டேதான் இருப்பார் ஷிவானி.. இந்த நடவடிக்கையை மற்ற போட்டியாளர்கள் பார்த்தாலும், எதையும் கண்டுகொள்வதே இல்லை.
ஆனால், ஷிவானி அளவுக்கு பாலாஜி இல்லை என்றே தெரிகிறது.. டைம் பாஸாக மட்டுமல்ல, கன்டன்ட் தருவதற்காகவே ஷிவானியுடன் பழகுவது போல இருப்பதாக பொதுவான பார்வை உள்ளது... அதுமட்டுமல்ல, வீட்டில் உள்ள ஆண் போட்டியாளர்களைவிட, சம்யுக்தா, சுச்சி, சனம், அனிதா என அனைத்து பெண் போட்டியாளர்களிடம் மட்டுமே சுற்றி சுற்றி பேசி வருகிறார் பாலாஜி.
இதனிடையே ஓவர் டோஸாக வந்துள்ளவர்தான் சுசித்ரா.. பாலாஜி சும்மா இருந்தாலும் சுச்சி விடுவதில்லை.. பாலாஜி கட்டிப்பிடிப்பது, முத்தம் தருவது என வேற லெவலில் உள்ளது.. இதை பார்த்த ரம்யா பாண்டியன் உட்பட பல ரசிகர்களும், "லவ் பண்ணுவதில்கூட போலியா இருக்காரே.. இதுல கூடவா கண்டன்ட் பார்ப்பது?" என்றும், ஆளுக்கொரு பக்கம் காதல் என்பதை முன்வைத்து கன்டன்ட் தந்து கொண்டிருந்தாலும், ஷிவானியை பார்த்தால் மட்டும் பாவமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications