மாட்டிகிட்ட மாதம்பட்டி ரங்கராஜ்! 6 மாத கர்ப்பத்துடன் கல்யாணம்! 2வது மனைவியின் முதல் கணவர் இயக்குனரா?
சென்னை: 'குக் வித் கோமாளி' புகழ் மாதம்பட்டி ரங்கராஜனை தான் திருமணம் செய்து கொண்டதாகவும் தற்போது ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜோய் கிரிசில்டா. முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் சிறைக்குச் செல்லக்கூட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், ஜோய் கிரிசில்டாவின் முதல் கணவர் பிரபல இயக்குனர் என்பது தெரிய வந்திருக்கிறது. இருவருக்கும் விவாகரத்தான நிலையில் மாதம்பட்டி ரங்கராஜை இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கிறார் ஜோய் கிரிசில்டா.
வழக்கமாக சின்னத்திரையில் இருந்து தான் பெரிய திரைக்கு சிலர் செல்வார்கள். ஆனால் பெரிய திரையிலிருந்து சின்னத்திரைக்கு வந்து புகழ் பெற்றவர் மாதம்பட்டி ரங்கராஜ். கோவை மாவட்டம் மாதம்பட்டியை சேர்ந்த இவர் பிரபல சமையல் கலைஞர் ஆவார்.
இந்தியா முழுவதும் பல்வேறு பிரபலங்களின் இல்ல நிகழ்ச்சிகளில் விருந்து வைத்து அசத்தியவர். தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் புரொமோட் செய்யப்பட்ட அவர் மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து விஜய் டிவியில் புகழ்பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டு சீசன்களில் நடுவராக பங்கேற்றார். இவருக்கும் கோவையை சேர்ந்த ஸ்ருதி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில் இருவரிடைய கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியே வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜோய் கிரிசில்டாவை காதலிப்பதாகவும் இருவரும் ரகசிய உறவில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
இதற்கிடையே தான் மாதம்பட்டி ரங்கராஜை காதலிப்பதாக கூறி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்தார் ஜோய் கிரிசில்டா. அதே நேரத்தில் மாதம்பட்டி ரங்கராஜன் மனைவி நான் தான் என ஸ்ருதியும் பதிவிட்டிருந்தார். விவகாரம் இப்படி போய்க்கொண்டிருக்க நேற்று திடீரென மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமண நடைபெற்றதாகவும், தான் தற்போது ஆறு மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் குழந்தையை எதிர்பார்ப்பதாக கூறி சில புகைப்படங்களை கிருஸில் வெளியிட்டார் ஜோய் கிரிசில்டா.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் இன்னும் ஸ்ருதியை விவாகரத்து செய்யவில்லை எனவும், முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது திருமணம் செய்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜோய் கிரிசில்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது இருவருக்கும் இடையே பிரச்சனை வந்ததால் அந்த புகைப்படங்களை ஜோய் கிரிசில்டா வெளியிட்டதாக சொல்லப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க ஜோய் கிரிசில்டாவுக்கும் இது இரண்டாவது திருமணம் தான். முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில் தற்போது அவர் மாதம்பட்டி ரங்கராஜை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. முதல் கணவரும் திரையுலகை சேர்ந்தவர் தான். தமிழ் சினிமாவில் பல நாயகர்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார் ஜோய் கிரிசில்டா. குறிப்பாக விஜய், சிவகார்த்திகேயன், ரவி மோகன் ஆகியோருக்கு ஆடை வடிவமைத்து கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் பிரபல இயக்குனரான ஜேஜே ஃப்ரெடிரிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கிரிஸில்டா. திருமணத்திற்கு பிறகு சினிமா துறையில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில், ஃப்ரடெரிக் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ஓடிடியில் வெளியானது. தொடர்ந்து பிரசாந்த் நடித்து வெளியான அந்தகன் படத்தை அவர் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் படத்தை இயக்க முடியவில்லை.
இந்த நிலையில் ஃப்ரெடிரிக் ஜோய் கிரிசில்டா இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். அந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. விவாகரத்து பெற்ற பிறகு தான் மீண்டும் சினிமாவுக்கு வந்தார் ஜோய். மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா மற்றும் சின்னத்திரையில் நுழைந்த போது அவருக்கான ஆடைகளை ஜோய் தான் வடிவமைத்து கொடுத்தார். அதன் பிறகு தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணம் வரை வந்திருக்கிறது.
இதற்கு இடையே மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவியான வழக்கறிஞர் ஸ்ருதி இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மாதம்பட்டி ரங்கராஜுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் விவாகரத்து குறித்தும், இரண்டாவது திருமணம் குறித்தும் இதுவரை மாதம்பட்டி ரங்கராஜ் எந்த கருத்தும் சொல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications