சமையல் எண்ணெய் விலை அதிரடியாக குறைவு.. ஆனால் தேங்காய் எண்ணெய் மட்டும் தாறுமாறாக உயர்வு
சென்னை: கச்சா பாமாயில், கச்சா சூரியகாந்தி, கச்சா சோயாபீன் எண்ணெய் ஆகியவை மீதான அடிப்படை சுங்கவரியை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்து கடந்த மே 31ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.இதனால் பாமாயில், சூரியகாந்தி போன்ற சமையல் எண்ணெய் விலையும் இப்போது கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ரூ.135 என்ற நிலையில் இருந்த பாமாயில் இப்போது 125 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சூரியகாந்தி எண்ணெய்யும் லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைந்துள்ளது.
சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் விலைகள் ஒரு லிட்டர் சராசரியாக 150 ரூபாய் என்கிற அளவில் விற்பனையானது. தேங்காய் எண்ணெய் தாருமாறாக உயர்ந்து காணப்படுகிறது. எண்ணெய்விலை அதிகமாக இருந்ததால், அதனை குறைக்க சுங்கவரியை கணிசமாக குறைத்துள்ளது மத்திய அரசு. அதாவது கச்சா பாமாயில், கச்சா சூரியகாந்தி, கச்சா சோயாபீன் எண்ணெய் ஆகியவை மீதான அடிப்படை சுங்கவரியை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்துள்ளது மத்திய அரசு. இந்த வரி குறைப்பு கடந்த மே 31-ந்தேதி அமலுக்கு வந்தது.

இதனால் பாமாயில், சூரியகாந்தி, சோயாபீன் உள்ளிட்ட 3 எண்ணெய்களுக்கான அனைத்து கட்டணங்கள் உள்ளடக்கிய இறக்குமரி வரி 10 சதவீதம் குறைப்பு காரணமாக 27.5 சதவீதத்தில் இருந்து 16.5 சதவீதமாக மாறி உளளது. சுங்கவரி குறைப்பின் காரணமாக தற்போது எண்ணெய் விலை கடைகளில் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தின்விலை நிலவரத்தை ஒப்பிடும் போது, பாமாயில், சூரியகாந்தி போன்ற சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10 வரை குறைந்துள்ளது.
சமையல் எண்ணெய் வியாபாரிகள் கொடுத்த தகவலின் படி, பாமாயில் ஒரு லிட்டர் . இதன் விலை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ரூ.135 என்ற நிலையில் இருந்த ஒரு லிட்டர் பாமாயில் விலை 10ரூபாய் குறைந்து, ரூ.125 முதல் விற்பனை செய்யப்படுகிறது . இதேபோல், 850 மி.லி. கொண்ட பாக்கெட் பாமாயிலின் விலை ரூ.112-ஆக உள்ளது. இதன் விலை கடந்த வாரத்தில் ரூ.126 என்று விற்பனையாகிறது. நல்லெண்ணெய் விலையும் சற்று குறைந்துள்ளது.
சூரியகாந்தி(சன்பிளவர் ஆயில்) எண்ணெய் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் 850 மி.லி. சூரியகாந்தி எண்ணெய் ரூ.146 முதல் ரூ.155 வரை விற்பனை ஆன நிலையில், தற்போது ரூ.136-ல் இருந்து ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் தேங்காய் எண்ணெய் விலை இன்னும் குறையவில்லை.. கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
மொத்த மார்க்கெட்டில் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் ரூ.260-க்கு விற்பனையானது. ஆனால் தற்போதைய விலை ரூ.400 வரை விற்கப்படுகிறது. வெறும் 45 நாளில் தேங்காய் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.140 உயர்ந்துள்ளது. இன்னும் அதன் விலை உயரும் என்று வியாபாரிகள் கூறினார்கள். தேங்காய் எண்ணெய்க்கான கொப்பரைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், அதன் விலை உயர்வதாக வியாபாரிகள் விளக்கம் அளித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications