சென்னையில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கூல் ட்ரிங்ஸ் பெருமாள் கைது.. பகீர் தகவல்
சென்னை: சென்னை டிபி சத்திரத்தில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கூல் ட்ரிங்ஸ் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video
போக்சோ சட்டம் தகவல், தொழில்நுட்ப சட்டம், கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சென்னை டிபி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் வயது(48) . கூல் டிரிங்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு லட்சுமி என்ற பெண்ணுக்கும் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒன்றரை ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

கள்ளக்காதலன் கைவரிசை
லட்சுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்த பெருமாள், லட்சுமியின் 9 வயது மகளை நான்கு முறை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். மகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததை லட்சுமி கண்டு கொள்ளவே இல்லை.

கூல் டிரிங்கஸ் பெருமாள்
மேலும், பெருமாள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளார். 9 வயது சிறுமியின் தோழிகள் 4 பேரிடமும் பெருமாள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கீழ்ப்பாக்கம்
சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம் நேற்று கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி பெருமாள் (வயது 48) அவருடைய கள்ளக்காதலி லட்சுமி (வயது 30) கள்ளக்காதலியின் சகோதரி வாணி(28) ஆகிய 3 பேரையும் சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

பாலியல் வன்கொடுமை
போக்சோ சட்டம் தகவல், தொழில்நுட்ப சட்டம், கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை கீழ்பாக்கம் போலீசார் தெரிவித்தனர். பெற்ற தாயே தனது குழந்தைக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டுகொள்ளாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்காதல் விவகாரங்கள் மோசமான தாக்கத்தை சமூகத்திலும், குழந்தைகளிடமும் ஏற்படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. கள்ளக்காதலால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் குழந்தைகளின் எதிர்காலங்களை மோசமாக பாதித்து வருகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications