பயமா இருக்கு.. ஜோதிடர்களின் காலை தொட்டு கேட்டுக்குறேன்! மாரிமுத்து மறைவு குறித்து கூல் சுரேஷ் பேட்டி
சென்னை: பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் திரை உலகையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் இவரது மரணம் குறித்து நடிகர் கூல் சுரேஷ் கூறியுள்ள கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
நடிகர் மாரிமுத்து கண்ணும் கண்ணும் கண்ணும், புலி வால் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அதேபோல சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டது. அதன் பின்னர் தற்போது சன் டிவியில் வெளியாகும் எதிர்நீச்சல் சீரியலில் இவரது கதாபாத்திரம் தமிழகம் முழுவதும் பெரிதும் பேமஸானது. அதேபோல ஜெயில் திரைப்படத்திலும் குறிப்பிட்ட ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.

என்னதான் சினிமா துறைக்கு பல ஆண்டுகள் முன்னரே இவர் வந்திருந்தாலும், சமீப காலமாகதான் இவரது வளர்ச்சி தொடங்கியது. இப்படி இருக்கையில் இன்று காலை டப்பிங் கொடுக்க தியேட்டருக்கு வந்தபோது திடீரென நெஞ்சு வலியால் துடித்துள்ளார். தியேட்டரிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த செய்தியால் தமிழக திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் சோஷியல் மீடியாக்களில் இவரது மரணம் குறித்து பல்வேறு விவாதங்கள் மேலெழுந்து வருகின்றன. அதாவது சில நாட்களுக்கு முன்னர் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருந்த மாரிமுத்து, ஜோதிடர்கள் குறித்து சரமாரியான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதனை குறிப்பிட்டு இந்த விமர்சனத்தால்தான் அவர் உயிரிழந்துள்ளதாக சோஷியல் மீடியாக்களில் சிலர் தகவல்களை பரப்பினர். இவ்வாறு இருக்கையில் மாரிமுத்துவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகர் கூல் சுரேஷ் பேசியுள்ள கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, "சமீபத்தில் ஜோதிடர்களை பற்றி ஒரு விமர்சனத்தை செய்திருந்தீர்கள். அந்த விமர்சனம் குறித்து பேசுவதற்கு எனக்கே பயமாக இருக்கிறது. ஒருவேளை ஜோதிடம் உண்மையா, பொய்யா என்று எனக்கே தெரியவில்லை. ஏனெனில் அவர் ஜோதிடர்கள் குறித்த விமர்சித்த பின்னர் பல ஜோதிடர்கள் இவரை பற்றி வாய்க்கு வந்ததையெல்லாம் கூறியிருந்தனர். இப்படி இருக்கையில் ஜோதிடம், சம்பிரதாயம் பார்ப்பது உண்மையா? பொய்யா என்பது குறித்து மிகவும் பயமாக இருக்கிறது.
ஏனெனில் நீங்கள் விமர்சனம் கூறியிருந்தீர்கள், அதன் பின்னர் பலபேர் பல்வேறு விதமாக கூறியிருந்தார்கள். எனவே அதனால்தான் இது நடந்திருக்குமோ? என எனக்கே அச்சமாக இருக்கிறது. இதன் பின்னர் ஜோதிடம் பார்க்கலாமா கூடாதா? என்பது குறித்து எனக்கே பயமாக இருக்கிறது. இப்போதுதான் 57 ஆண்டுகளுக்கு பின்னர் வெற்றி படிக்கட்டை நோக்கி நகர்ந்துக்கொண்டிருந்தார்கள். இப்படி இருக்கையில் சகுனிகள் செய்த சூழ்ச்சியா? என்று தெரியவில்லை இப்போது இப்படி ஆகிவிட்டது.

மாரிமுத்து சார் நீங்கள் விமர்சனங்கள் செய்தீர்கள். நானும் சில நேரங்களில் நம்புவேன், நம்பாமல் இருப்பேன். ஒருவேளை இதனால் இதுபோன்று நடந்துவிட்டதோ? ஜோதிட நிபுணர்களே மாரிமுத்து ஏதேனும் தவறாக பேசியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் சினிமாவை சேர்ந்தவன், சினிமாவில் உள்ளவர்கள் நல்ல நேரத்தில்தான் பூஜை போடுவார்கள், தேங்காய் உடைப்பார்கள் எனவே ஜோதிடர்களின் சப்போர்ட் இந்த சினிமா உலகத்திற்கு வேண்டும்.
எனவே மாரிமுத்து சார் மட்டுமல்லாது வேறு யாரேனும் இப்படி பேசியிருந்தால் உங்கள் பாதம் தொட்டு கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன், எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, பயமாக இருக்கிறது. ஒருவேளை இது பொய்யாக இருந்திருந்தால் அவர் மாரடைப்பால்தான் இறந்திருக்கலாம். உண்மையாக இருந்தால் ஜோதிடத்தால்தான் இறந்தாரா என்று தெரியவில்லை. எனவே அவரவர் கருத்துக்களை வெளியில் சொல்வது ஓகே. ஆனால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடப்பது எனக்கும் பயமாகதான் இருக்கிறது. மாரிமுத்துசாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்" என்று கூறியுள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications