என்னாச்சு லோகேஷ்.. கூலி படத்தில் இந்த 17 தவறுகளை நோட் பண்ணீங்களா? ஏகப்பட்ட ஓட்டைகள்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி (coolie) படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் கதை வித்தியாசமாக இருந்தாலும் பல இடங்களில் கதையில் நிறைய ஓட்டை இருக்கிறது.
அவசர அவசரமாக கதை எழுதியது போல.. படம் முழுக்க நிறைய தவறான விஷயங்கள் உள்ளன . படத்தில் பல இடங்களில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் பல விஷயங்களை செய்கின்றன. படம் பார்த்த பலருக்கும் எழுந்த 17 சந்தேகங்கள், தவறுகளை இங்கே சுட்டிக்காட்டி உள்ளோம்.

1. கூலி (coolie) படத்தின் இரண்டாம் பகுதி முழுக்க ஸ்ருதி ஹாசன் ஓடுவதுதான் கதை. அவர் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுவார். அவரை காப்பாற்ற தன்னுடைய மேன்சனில் உள்ள காமெடி கதாபாத்திரங்களை ரஜினி அனுப்புவார். அதே மேன்சனில் சண்டை போட 19 கூலிகள், உபேந்திரா உட்பட, இருக்க.. ரஜினி ஏன் காமெடியன்களை காப்பாற்ற அனுப்ப வேண்டும்?
Coolie Review Tamil
2. உபேந்திரா ஒரே ரூமில் நீலாம்பரி போல இருக்கிறார். அவர் ஏன் அங்கேயே இருக்கிறார்? அவர் ரூமிற்கு அருகே சத்தம் போட்டால் என்னதான் பிரச்சனை? சந்திரமுகி பாம்பு போல கடைசி வரை உள்ளேயே இருந்தது ஏன்? அவரின் கதாபாத்திரம் அப்படி வடிவமைக்கப்பட்டது ஏன்? அவர் என்ன தவறு செய்ததற்காக ஒரே ரூமில் இருக்கிறார்?
3. ரஜினி பிளாஷ்பேக்கில் சைமன் அப்பாவை கொன்றதற்காக சத்யராஜ் அவருடன் பேசவில்லை என்று வைத்துக்கொள்வோம். ஆனால் ஸ்ருதி ஹாசன் ஏன் ரஜினி மீது கோபத்தில் இருக்கிறார். ஏன் தொடக்கத்தில் சிடுசிடு என்று இருக்கிறார்.
4. கூலிகளின் மேனேஜர் போல இருந்த சத்யராஜ்.. எப்படி சைன்டிஸ்ட் ஆனார்?
5. விலங்குகளை, மனிதர்களை எரிக்க ஏற்கனவே மின்சார தகன மேடைகள் இருக்க.. ஏன் அப்படி ஒரு சேர் உருவாக்க வேண்டும்.
Coolie Movie Mistakes:
6. 4000 கோடி சொத்து வைத்து இருக்கும்.. நாகார்ஜுனா.. ஒரு சின்ன மின்சார தகன மேடை செட்டப்பை சொந்த இடத்திலேயே உருவாக்கி இருக்கலாமே... சிம்பிளாக கதை முடிந்திருக்குமே?
7. அந்த மின்சார இருக்கையை இயக்குவது அவ்வளவு கஷ்டம் என்றால்.. ரச்சிதா எப்படி அதை திடீரென இயக்குகிறார்.சார்லியை எப்படி ரச்சிதா கொல்கிறார். ஏனென்றால் தொடக்கத்தில் சோபின் ஸ்ருதிஹாசனை தேடி வருவதே அந்த இருக்கையை இயக்க வேண்டும் என்றுதான்.. அவரின் மனைவி ரச்சிதாவிற்கே அது தெரியும் என்றால்.. ஏன் ஸ்ருதி ஹாசனை தேடி போக வேண்டும்?
8. ஒவ்வொரு முறை சத்தியராஜ், சுருதிஹாசனிடம் பல லட்சம் கொடுத்து இதை இயக்குவதற்கு பதிலாக.. இந்த செட்டப்பை செய்து கொடுப்பதற்கு பதில் நாகர்ஜூனாவே ஏன் தனது ஊழியர்களுக்கு இதை கற்றுக்கொடுக்கும்படி சத்தியராஜை மிரட்டி இருக்க கூடாது? ஏன் ஒவ்வொமுறையும் சத்தியராஜுக்கு காசு கொடுத்து வேலை வாங்க வேண்டும்.
9. நாகார்ஜுனா மகன் சாகும் நேரத்தில் அது பல டிவி திரைகளில் வரும். அந்த ரூம் எதற்கு? அந்த காட்சி எதற்கு?
10. சோபின் - ஸ்ருதி ஏன் ரயில் ஓட்டுகிறார்கள்? அவர்கள் வெறுமனே ரயிலின் எந்த பெட்டியில் வேண்டுமானாலும் தப்பிக்கலாமே?
Coolie - கூலி விமர்சனம்
11. அமீர்கான் ஏன் ரஜினியை உயிரோடு விட வேண்டும். ஏனென்றால் ரஜினி மொத்தமாக நாகர்ஜுனா சிண்டிகேட்டை கொன்ற பின்.. எப்படி அமீர்கான் விடுகிறார்?
12. அமீர்கான் மொட்டை வெயிலில்.. ஏன் பாலைவனத்தில் டேபிள் போட்டு.. கடைசியில் அதை உடைத்து நொறுக்க வேண்டும்? யாரு பாஸ் நீங்க?
13. படத்தில் வாட்ச் பெரிதாக வராத போது.. ஏன் டீசர், போஸ்டரில் அதை பெரிதுபடுத்தி காட்ட வேண்டும்?
14. இறந்து போன சோபின் - ஐஸ் பேக்கில் வைத்த பின் எப்படி எழுந்து வருகிறார்? என்னங்க இது பித்தலாட்டம்?
15. படத்தில் பூஜா ஹெக்டே பெரிய பணக்கார பெண். அவரின் நிச்சயதார்த்தத்தை ஹார்பரில் நடத்துவது எல்லாம் காமெடியாக இல்லை. அதுவும் நிச்சயதார்த்த பெண்.. மோனிகா பாடலுக்கு கூலிகள் முன் ஆடுவது இன்னும் காமெடியாக இல்லை?
16. படத்தில் இன்னொரு கதாபாத்திரமும் இடையில் உளவாளி போல வரும். அவரை காப்பாற்ற இண்டர்வல் முடிந்ததும் சீக்ரெட் அறையில் ரஜினி சண்டை போடுவார்.. இந்த சம்பந்தமே இல்லாத கதைக்களம் எதற்கு?
17. கூலி நம்பர் சொல்பவர்தான் ரஜினியின் மகள் என்று சார்லிக்கு எப்படி தெரியும்? இப்படி படம் முழுக்க ஏகப்பட்ட காமெடிகள், ஓட்டைகள் இருக்கின்றன. இரண்டு வருடம் படத்திற்காக உழைத்த லோகேஷ் கனகராஜ் கொஞ்சம் கதையை தவறு இன்றி எழுதுவதிலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் கூலி.. போலி!
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications