30 அடி பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. குன்னூரில் பலியான 8 பேர்.. நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: நீலகிரி மாவட்டம் குன்னூரில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சுற்றுலா பஸ் விபத்துக்குள்ளானதில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, பலியானவர்கள், படுகாயமடைந்தவர்கள், லேசான காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தை சேர்ந்த பலரும் சுற்றுலா தளங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தான் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் அதிகமாக வந்து செல்கின்றனர்.

இதனால் தற்போது ஊட்டியில் தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் தான் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுற்றுலா பஸ்சில் ஊட்டிக்கு சென்றனர். பஸ்சில் மொத்தம் 59 பேர் இருந்தனர்.
இந்த பஸ் குன்னூர் -மேட்டுப்பாளையம் மரப்பாலம் அருகே வந்தது. அப்போது வளைவில் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுப்புச்சுவரில் மோதி 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதுபற்றி அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 8 பேர் பலியாகினர்.
மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் இன்னும் சிலர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா சென்று வீடு திரும்பியபோது பஸ் விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு நிதியுதவியையும் அறிவித்துள்ளார். அதன்படி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் என நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்த விபத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பிற அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications