கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெறுவது என்பது சாமானிய மக்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம் ஆகும். இங்கு நகை மதிப்பீடு எப்படி நடக்கிறது என்பதையும் அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் கடன் கட்டாவிட்டால் என்ன நடக்கும்? கடன் மதிப்பீடு தள்ளுபடி மற்றும் ஏல நடைமுறைகள் குறித்த முழு விவரங்கள் என்னென்ன? இவைகளை எல்லாம் இங்கே சுருக்கமாக பார்க்கலாம்..!!
LTV என்பது நகை மதிப்பீடு மற்றும் கடன் தொகை ஆகும்.. நீங்கள் கூட்டுறவு வங்கிக்கு நகையை எடுத்துச் சென்றதும் அங்குள்ள நகை மதிப்பீட்டாளர் உங்கள் நகையை ஆய்வு செய்வார்... அதிலும் நகையின் உரைகல் சோதனையைச் செய்து அது எத்தனை காரட் தங்கம் என்பதை உறுதி செய்வார்.

கூட்டுறவு வங்கி நகைக்கடன்
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது "கடன் மதிப்பு விகிதம்" என்று சொல்லப்படும் LTV Ratio... அதாவது உங்கள் நகையின் இன்றைய சந்தை மதிப்பில் 75 சதவீதம் வரை மட்டுமே வங்கிகள் கடன் கொடுக்கும்.
உதாரணமாக உங்கள் நகையின் மதிப்பு 1 லட்சம் ரூபாய் என்றால் வங்கி உங்களுக்கு 75,000 ரூபாய் வரை கடன் தரும். மீதமுள்ள 25 சதவீதம் என்பது தங்க விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்காக வங்கியால் கையிருப்பாக வைக்கப்படும்..
சூப்பரான அரசு தள்ளுபடி திட்டங்கள்
நம்முடைய தமிழக அரசு அவ்வப்போது கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிடுகிறது. குறிப்பாக நலிந்த பிரிவினர் மற்றும் விவசாயிகள் வாங்கிய கடன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு குடும்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட எடை வரை (உதாரணமாக 5 சவரன் வரை) மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும். இதற்காக வங்கிகளில் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்கள் சரிபார்க்கப்படும். தள்ளுபடி கிடைத்ததும் அந்த நகைக்கான அசலும் வட்டியும் ரத்து செய்யப்பட்டு மக்கள் தங்கள் நகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்..
அதென்ன ஏல நடவடிக்கை?
வங்கியில் கடன் வாங்கி 1 வருடம் ஆகியும் அசலையோ அல்லது வட்டியையோ கட்டவில்லையானால், அந்த நகையை வங்கி ஏலத்திற்கு கொண்டு வரும். ஆனால் உடனே ஏலம் விடமாட்டார்கள். முதலில் உங்களுக்குத் தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பப்படும். அதன் பிறகும் நீங்கள் பணம் கட்டவில்லை என்றால் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டு பொது ஏலம் நடத்தப்படும்..!!
ஏலத்தில் கிடைக்கும் தொகையில் வங்கியின் அசல் மற்றும் வட்டி போக மீதமுள்ள தொகை ஏதேனும் இருந்தால் அது உரிய வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கப்படும்...!
ஆனால் ஏலம் வரை செல்லாமல் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துவதே உங்கள் நகையைப் பாதுகாக்கச் சிறந்த வழியாகும்.. இப்படி மிக எளிமையான முறையில் கூட்டுறவு வங்கிகள் செயல்படுவதால் மக்கள் குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது..!!
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications