கூட்டுறவு சங்கங்கள்.. பயனாளிகளுக்கு வீட்டுவசதியில் கடன் நிலுவையால் பத்திரம் கிடைக்கலை? ரூல்ஸ் மாறுதா
சென்னை: கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் நிலுவை செலுத்திய பயனாளிகள் பத்திரம் இன்னும் பெறவில்லை என்ற தகவல் கசிந்துள்ளது.. இதனால் பயனாளிகள் தீர்வு எப்போது கிடைக்கும், எந்த நன்மைகள் வழங்கப்படும் என்று காத்திருக்கிறார்களாம்.. இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பரவி வரும் செய்தி என்ன? தமிழக அரசு செய்ய போவது என்ன?
தமிழகத்தை பொறுத்தவரை, தற்போதைய நிலவரப்படி, 680 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த சங்கங்கள் மக்களுக்கு பாதுகாப்பான முறையில் சொந்த வீடு அல்லது வீட்டு மனை பெற உதவுகின்றன.

கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள்
அரசு கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு இருப்பதால், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் காணப்படும் மோசடி, அதிக விலை போன்ற பிரச்சினைகள் இங்கு குறைவாக இருக்கும்... நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மலிவான விலையில் வீட்டு வசதி கிடைப்பதே இந்த சங்கங்களின் பயனாக உள்ளது..
லாப நோக்கம் இல்லாமல் செயல்படும் இந்த சங்கங்களில், வீட்டு மனை ஒதுக்கீடு, வீடு கட்ட கடன், தவணை முறையில் செலுத்தும் வசதி போன்ற சலுகைகள் கிடைக்கின்றன. பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் என்பதால் சட்டபூர்வமான ஆவணங்கள், தெளிவான உரிமை, பாதுகாப்பான முதலீடு ஆகியவை உறுதி செய்யப்படுகின்றன.
சொத்து பாதுகாப்பு - கடன் வசதி
அதுமட்டுமல்ல, சில சங்கங்கள் சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளையும் ஏற்பாடு செய்து தருகின்றன. நீண்ட காலத்தில் நிலத்தின் மதிப்பு உயர்வதால், உறுப்பினர்களுக்கு சொத்து பாதுகாப்பும் பொருளாதார நிலைத்தன்மையும் கிடைக்கிறது. எனினும் ஒரு சிக்கல் தொடர்ந்து நிலவி வருகிறது.
அதாவது, இந்த சங்கங்களில் வீட்டுவசதி கடன் வாங்கியவர்கள் தங்களின் கடன் நிலுவையை செலுத்தும்போது வசதி ஏற்படுத்தும் வகையில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அபராத வட்டி தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தின் மூலம், கடன் நிலுவையை சரியாக செலுத்திய 8000 பேருக்கு, நீண்டகால போராட்டத்துக்குப் பிறகு, அவர்களின் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
பத்திரம் கிடைக்கவிலை
இதனை தொடர்ந்து, மறுபடியும் அபராத வட்டி தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 5,000க்கும் மேற்பட்டோர் தங்களின் நிலுவை தொகையை முறையாக செலுத்தினார்கள்... ஆனால் அவர்கள் இன்றுவரை பத்திரங்களை பெற முடியாமல் காத்திருக்கிறார்கள்.. இதுதான் தற்போது நெருடலை தந்துள்ளது..
இதுகுறித்து, ஒரு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் தரப்பில் சொல்லும்போது, "சங்கங்களும் வீட்டுவசதி இணையத்துக்கும் இடையிலான நிர்வாக மற்றும் தகவல் பரிமாற்ற பிரச்சினைகள் காரணமாக, நிலுவை தொகையை செலுத்திய 5000 பேர் பத்திரம் பெற முடியாமல் காத்திருக்கிறார்கள்.
கடன் நிலுவை - பத்திரங்கள்
சங்கங்கள் பெயரில் உள்ள கடன் நிலுவையை சரிசெய்து, பத்திரங்களை வழங்க அரசு உத்தரவிட்டிருந்தாலும், இணைய அதிகாரிகள் அதனை முழுமையாக செயல்படுத்தவில்லை.. இதனால், இன்னும் சிலர் நிலுவை தொகையை செலுத்த தயங்குகிறார்கள்..
இதனால் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் நிதி நிர்வாகம் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கும் சங்கங்களுக்கும் ஒரே நேரத்தில் பிரச்சினை ஏற்படுகிறது" என்று கவலை தெரிவித்துள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications