பொதுக்குழுவை புறக்கணிக்கக் கோரி கடிதம் எழுதினாரா? மறுப்பு தெரிவித்த ஓபிஎஸ் தரப்பு.. உண்மை என்ன?
சென்னை: அதிமுக பொதுக்குழுவை உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று எந்த கடிதமும் எழுதவில்லை என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாளை நிச்சயம் பொதுக்குழு நடக்கும். அனைவரும் கலந்துகொள்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறார் என்று நேரடியாக சுட்டிக்காட்டினார். இபிஎஸ் தரப்பில் மிகவேகமாக பொதுக்குழு கூட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
அதேபோல் ஓபிஎஸ் தரப்பில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. இந்தநிலையில், நாளை நடக்கும் பொதுக்குழு கூட்டத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியது.
இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு வந்த ஆதரவாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், எல்லோரும் பொறுத்திருங்கள் அமைதியாக இருங்கள், நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் தரப்பில், நாளை பொதுக்குழு நடக்குமா? நீங்கள் பங்கேற்பீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், எதுவாக இருந்தாலும், மாலை சொல்கிறேன் என்று தெரிவித்தார்.
அதேபோல் பொதுக்குழுவை புறக்கணிக்க வேண்டும் என்று தாம் எந்தக் கடிதமும் எழுதவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். இதனால், நாளை நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் மாலை முக்கிய அறிவிப்பு வெளியிடப் போகிறேன் என்று கூறியுள்ளதால், எது என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
அரசு இல்லத்திற்கு பை-பை.. ராயப்பேட்டை சொகுசு பங்களாவில் குடியேறினார் எடப்பாடி.. பின்னணி என்ன? -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
தேன்கூட்டில் கல்லெறிந்ததா தவெக? வேலுமணி கிட்ட சிவி சண்முகம் கேட்ட அந்த கேள்வி? அப்ப எடப்பாடி முடிவு? -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்










Click it and Unblock the Notifications