கூவம் பாலம் மூழ்கியது.. மதுரவாயல் அம்பத்தூர் இடையே வெள்ளம்.. கொசஸ்தலை ஆற்றிலும் வெள்ளம்
சென்னை: சென்னை மதுரவாயல் அம்பத்தூர் இடையே உள்ள அடையாளம்பட்டில் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. அடையாளம்பட்டு தரைப்பாலத்தின் மீது தண்ணீர் செல்வதால் போக்குவரத்து இரண்டாவது நாளாக இன்றும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 2 கி.மீ. தூரம் வாகனங்கள் சுற்றி செல்லும் நிலை இருக்கிறது.
வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகளவில் நீர் வரத்து தொடங்கியது. இதனால், பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 15-ம் தேதி மதியம் முதல் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் எனில், பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் அணை 199.27 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. வடகிழக்கு பருவமழையால், இந்த அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீரும் பூண்டி ஏரிக்கு வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் பூண்டி ஏரிக்கு, நீர்வரத்து விநாடிக்கு 3,970 கன அடியாக இருந்தது. ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு, விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது. இதனால், 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர்இருப்பு, 2,601 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்ட உயரம், 33.27 அடியாகவும் இருந்து வந்தது.
தற்போத பூண்டி ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,500 கனஅடியாக இருந்தது. இதனால் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, பூண்டி ஏரியின் உபரிநீர் செல்லும் கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இது ஒருபுறம் எனில், கூவம் ஆற்றில் ஆவடி, புதுசத்திரத்தில் உள்ள தடுப்பணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் மழைபெய்து வருவதால் தடுப்பணையில் நீர் அதிக அளவு வெளியற்றப்படுகிறது.. திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்யும் மழை நீர் கூவம் ஆறு வழியாக சென்று கடலில் கலக்கிறது. நீர் திறக்கப்பட்டதால் ஆவடி, காடுவெட்டி, திருவேற்காடு, வானகரம், மதுரவாயல் கூவம் ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
கூவம் ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்தால், தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளன. இதனால், அவ்வழியே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கிய நிலையில், ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்து செல்வதை காண முடிந்தது.
இதையடுத்து அவ்வழியே வாகனங்கள் செல்லாமல் இருக்க, போலீசார் இரும்பு தடுப்புகள் வைத்திருக்கிறார்கள். நொளம்பூர் தரைப்பாலம் மற்றும் மதுரவாயல் தரைப்பாலத்தை பயன்படுத்துவோர், மதுரவாயல் சன்னிதி தெருவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை பயன்படுத்துகிறார்கள். கோயம்பேடு ரயில் நகர் தரைப்பாலத்திற்கு பதில், நெற்குன்றத்தில் உள்ள கோல்டன் மேம்பாலத்தை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications