கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து.. சென்னைக்கு வந்த பயணிகள் யார்.. இதோ பெயருடன் லிஸ்ட்!
சென்னை: சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியுள்ள நிலையில், அதில் பயணிக்கும் பயணிகள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா புறநகரில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 3.20 மணிக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிசா, ஆந்திரா வழியாகச் சென்னை வந்தடையும்
12841 எண்ணைக் கொண்ட இந்த ரயில் நாளைய தினம் மாலை சென்னைக்கு வர இருந்தது. இன்று இந்த ரயில் பாலசோர் மாவட்டத்தில் வரும் போது விபத்தில் சிக்கியுள்ளது. பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த ரயில் தடம் புரண்ட நிலையில், அங்கே இருந்த சுமார் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதாகக் கூறப்படுகிறது. இந்த ரயில் தடம் புரண்டிருந்த நிலையில், யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அங்குத் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
அதாவது கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அங்கு வந்த நிலையில், ரயிலை உரிய நேரத்தில் நிறுத்த முடியாத நிலையில், அந்த ரயிலும் மோதியுள்ளது. அந்த ரயிலின் அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன.
இதற்கிடையே தற்போது மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மூன்றாவதாக மற்றொரு சரக்கு ரயிலும் அதில் மோதியுள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்குத் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. இரவு நேரம் என்பதாலும் வனப்பகுதி என்பதாலும் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த ரயிலில் பயணித்தோரின் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரயிலில் முன்பதிவு செய்து பயணித்தோர் குறித்த தகவல்களை அறிய இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேநேரம் முன்பதிவு செய்யாத பயணிகளுடன் சேர்த்து எத்தனை பேர் ரயிலில் சென்னக்கு வந்தனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
மேலும், இந்த ரயில் விபத்து தொடர்பாகத் தமிழ்நாடு அரசு உதவி எண் அறிவித்துள்ளன. 044 2859 3990, 94458 69843 ஆகிய தொலைப்பேசி எண்களில் தகவல் அறியலாம். மேலும், ரயில் விபத்து தொடர்பாக உதவி பெற 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications