சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா 2வது அலை தீவிரமாக இருக்கும்... #அன்றே சொன்ன ரஜினி ட்விட்டரில் ரசிகர்கள் ட்ரெண்ட்

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் என்று டிசம்பரிலேயே கணித்தவர் ரஜினிகாந்த என்று கூறி #அன்றே சொன்ன ரஜினி என்று அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவும் என்று அன்றே சொன்னார் ரஜினி என்று அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அரசியலை விட்டு ஒதுங்கிய சுயமில்லாத தலைவர் ரஜினிகாந்த். இப்போது உள்ள அரசியல் தலைவர்கள் பதவிக்காக மக்களை பலிகடா ஆக்கிவிட்டனர் என்று ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
#அன்றே_சொன்ன_ரஜினி என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் என்பதை கடந்த டிசம்பர் மாதமே தனது அறிக்கையில் ரஜினிகாந்த் சுட்டிக்காட்டியிருந்ததை ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலுக்கு வருவேன் என்று ட்விட்டரில் சொன்னார் ரஜினிகாந்த். அண்ணாத்தே படப்பிடிப்புக்கு போன இடத்தில் உடல் நலமில்லாமல் போகவே தனது அரசியல் வருகையை தள்ளிப்போட்டார். கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவுவதால் உடல் நலத்தை காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கூறி 3 பக்க அறிக்கையை டிசம்பர் 29ஆம் தேதி வெளியிட்டார் ரஜினிகாந்த்

ஸ்டெர்லைட் ஆலையை விட்டால் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேறு நிறுவனங்களே தமிழகத்தில் இல்லையா?.. கமல்ஸ்டெர்லைட் ஆலையை விட்டால் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேறு நிறுவனங்களே தமிழகத்தில் இல்லையா?.. கமல்

என்னை நம்பி வந்தவர்கள்

என்னை நம்பி வந்தவர்கள்

கொரோனா பரவல், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்த ரஜினிகாந்த் தனது அறிக்கையில், "என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேம். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

அரசியலுக்கு வர முடியவில்லை

அரசியலுக்கு வர முடியவில்லை

கொரோனா உருமாறி புதுவடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருப்பதையும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார் ரஜினிகாந்த். நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். ரசிகர்கள் சோர்வடைந்தாலும் உயிர்தான் முக்கியம் என்று சொல்லி ஆறுதல் பட்டுக்கொண்டனர்.

கொத்து கொத்தாக கொரோனா

கொத்து கொத்தாக கொரோனா

நாடு முழுவதும் கொத்து கொத்தாக கொரோனா பரவுகிறது, தமிழகத்தில் தினசரியும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யாமல் தொற்று பரவலுக்கு தேர்தல் ஆணையம் காரணமாக இருந்ததாக உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

அரசியல் கட்சியினர்

அரசியல் கட்சியினர்

கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம், தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யாமல், சமூக இடைவெளியின்றி அரசியல் கட்சிகளை இஷ்டம் போல் பிரசாரம் செய்ததே தொற்று பரவலுக்கான காரணம்.

காட்டமாக விமர்சித்த நீதிபதி

காட்டமாக விமர்சித்த நீதிபதி

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நீதிமன்றம் எவ்வளவோ அறிவுறுத்தியும் நீங்க காதில் வாங்கவில்லை என்று தேர்தல் ஆணையத்தை காட்டமாக விமர்சித்துள்ளார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. தேர்தல் நாளான்று உரிய பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற தேர்தல் ஆணையத்தின் பதிலுக்கு பிரசாரம் நடந்தபோதேல்லாம், வேற்று கிரகத்தில் இருந்தீர்களா என தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்க வேண்டும், சுகாதாரத்துறை செயலர் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனரிடம் உரிய ஆலோசனை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

#அன்றே_சொன்ன_ரஜினி

#அன்றே_சொன்ன_ரஜினி

இப்போது நீதிமன்றம் கூறும் காரணத்தை முன்கூட்டியே கணித்ததாக ரஜினிகாந்த் ரசிகர்கள் ட்விட்டரில் #அன்றே_சொன்ன_ரஜினி என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். சுயநலமில்லாத தலைவர் ரஜினிகாந்த் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

வாழ்க்கையை காப்பாற்றியவர்

ரஜினிகாந்த் மனிதக்கடவுள். அரசியலுக்கு வராமல் பலரது வாழ்க்கையைக் காப்பாற்றியவர் என்று தெரிவித்து அவரது ரசிகர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

English summary
Andre Sonna Rajini trending 29th December Rajinikanth warned COVID second wave in coming fans are tweeted. But these power hunger politicians made wave into Tsunami Rajinikanth only Selfless Leader in the world,his fans said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X