Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மக்களே உஷார்.. கொரோனா தொற்றால் முதியவர் உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. சென்னை மறைமலை நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்றால் ஏராளமான பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கொரோனா பெருந்தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கொரோனா, உருமாறிய கொரோனா என அடுத்தடுத்து பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பவே கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகின. கொரோனாவில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளில் இருந்தே பலரும் இன்னும் மீண்டு வரவில்லை.

Corona Chennai

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து, தற்போது கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது.

மஹாராஷ்டிரம், குஜராஜ், கர்நாடாகா, தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் 1000க்கும் மேற்பட்டோர் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும், சமீபகாலமாக அதிகரித்து வரும் தொற்று குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பொது இடங்களுக்குச் செல்லும்போது பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மறைமலை நகரைச் சேர்ந்த மோகன் (60) என்பவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மோகன் உயிரிழந்தார். கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+