ஒரே நாளில் 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா உறுதி.. சென்னையில் அதிர்ச்சி
சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 6 காவல் ஆய்வாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் களப்பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கும் கொரோனா தொற்றி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆய்வாளர்கள்
இன்று மட்டும் சென்னையில் ஒரு பெண் காவல் ஆய்வாளர் உள்பட 6 காவல் ஆய்வாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றபபிரிவில் வேலை பார்க்கும் காவல் ஆய்வாளருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிர்ச்சி
முன்னதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் இரண்டு பெண் உதவி ஆய்வாளர்களுக்கும் கொரோனா உறுதியானது. இது தவிர சாத்தாங்காடு காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர், மணலி புதுநகர் காவல் ஆய்வாளர், முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர், எண்ணூர் காவல் ஆய்வாளர், மதுரவாயல் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஆகிய 6 பேருக்கும் ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு பணி
சென்னை மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு ஊர்க் காவல் படையினருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அது போல் சென்னை மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள அறையில் 40 ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

மேலும் 4 பேருக்கு கொரோனா
இங்கு தங்கியிருந்த 29 வயதான ஆயுதப்படை காவலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்நர் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மற்ற 39 காவலர்களுக்கும் கொரோேனா சோதனை செய்யப்பட்டது. இதில் 4 பேருக்கு கொரோனா உறுதியாகி அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications