ஸ்டாலின் சொன்ன ஒரே வார்த்தை.. "ஓகே" சொல்லி.. களமிறங்கிய கூட்டணிகள்.. கொளத்தூரில் அசத்தல்..!

ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் கொரோனா உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில்,கொரானா உதவி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.. வீடு தோறும் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.. இதையடுத்து, இந்த மையத்தை உருவாக்கிய அந்த பகுதி கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.. !

கடந்த வாரம்கூட, முதல்வர் தன்னுடைய கொளத்தூர் தொகுதியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார்... அதேபோல, தூய்மை பணியாளர்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

மேலும் ஊரடங்கு காரணமாக தவிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், அரிசி, எண்ணெய், பருப்பு, உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் சானிடைசர், முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களையும் ஸ்டாலின் வழங்கியதுடன், தடுப்பூசி போடும் முகாமையும் பார்வையிட்டு சென்றார்.

 வேண்டுகோள்

வேண்டுகோள்

இதனிடையே, முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் கொரோனா உதவி மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது... இதை செய்திருப்பது திமுக இல்லை, அந்த பகுதியின் கம்யூனிஸ்ட் கட்சியாகும். அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை விரட்ட வேண்டும் என்று ஸ்டாலின் சொன்ன ஒரு வார்த்தைதான், இப்போது கூட்டணியில் உள்ள கட்சிகளும் இணைந்து கரம் கோர்த்துள்ளன.

 வேண்டுகோள்

வேண்டுகோள்

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்பதற்கு 4 நாளைக்கு முன்னாடியே, கொரோனா ஒழிப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.. அதேபோல, கொரோனாவில் இருந்து மக்களை மீட்க அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் கேட்டுக்கொண்டபடியே பல தரப்பினரும், கட்சிகளும் ஒத்துழைப்பு தந்து வருகின்றனர்..

 கம்யூனிஸ்ட்

கம்யூனிஸ்ட்

கொளத்தூர் தொகுதியில் கொரோனா உதவி மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது... இதனை அந்த பகுதி கம்யூனிஸ்ட் கட்சி துவங்கி உள்ளதுடன், முழு வீச்சில் களத்திலும் இறங்கி உள்ளது.. உள்ளது.. கொளத்தூர் பகுதி மக்களுக்கு இந்த மையத்தின் மூலம், மருத்துவ ஆலோசனையும் கொரோனா பற்றிய பொதுவான மருத்துவ அறிவியல் விளக்கமும் தரப்படுகிறது.

 தடுப்பூசி மையங்கள்

தடுப்பூசி மையங்கள்

அதேபோல, டாக்டர்கள் பரிந்துரைப்படி வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு தேவையான உதவிசெய்வது, மருத்துவமனைக்குச் செல்வதற்கு இலவச ஆட்டோ வசதி, தடுப்பூசி மையங்கள், மருத்துவமனைகள் பற்றிய விவரம் அளிப்பதிலும் இந்தக் குழுவினர் ஈடுபடுகின்றனர்.. இதனால் பலரும் நேரடியாக பயன்பெற்று வருகிறார்கள்.. வீடுகளுக்கு சென்று, கொரோனா காலத்துக்கான கஞ்சி போன்ற உணவுகளை தயாரிக்கும் முறைகள் எடுத்து சொல்லப்பட்டு வருகிறது.. அதேபோல,

 சித்த மருத்துவம்

சித்த மருத்துவம்

நிலவேம்புக் குடிநீர், கபசுரக் குடிநீர், நொச்சிக் குடிநீர், ஆடாதொடைக் குடிநீர், ஓமக்குடிநீர், அமுக்கரா சூரணம், தாளிசாதி சூரணம், அதிமதுர சூரணம், போன்ற பல்வேறு மருந்துகளைப் பற்றியும் சித்த மருத்துவர்கள் எடுத்து சொல்லி வருவது அந்த பகுதி மக்களுக்கு பெருத்த உபயோகமாக இருந்து வருகிறது. இவர்கள்தான் கொளத்தூரையே இந்த ஒருவாரமாக திரும்பி பார்க்க வைத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+