தமிழகத்தில் ஏறுமுகத்தில் கொரோனா.. 29 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு.. முழு விவரங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், இன்று மட்டும் மேலும் 28,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 30,42,796 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இன்றும் பாதிப்பு குறைந்து இன்று 7520 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தினமும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,தமிழகத்தில் மேலும் 28,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இது நேற்றைய பாதிப்பை விடவும் கூடுதலாக உள்ளது.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை

தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 19,978 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 28,26,479 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 37,112ஆக உயர்ந்துள்ளது.

39 பேர் உயிரிழப்பு

39 பேர் உயிரிழப்பு

கொரோனா காரணமாக தனியார் மருத்துவமனைகளில் 19 பேரும், அரசு மருத்துவமனைகளில் 20 பேரும் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 7520 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 6,76,147 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சோதனை

கொரோனா சோதனை

இதுவரை 6,01,35,832 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 1,54,912 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,79,205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை மொத்தம் 17,77,006 ஆண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைக்கு மட்டும் 16,234 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    Omicrons 20 Symptoms Revealed! How Long They Last | OneIndia Tamil
    கொரோனாவால் பெண்கள் பாதிப்பு

    கொரோனாவால் பெண்கள் பாதிப்பு

    பெண்களில் இதுவரை மொத்தம் 12,65,752 பேர் பெண்கள் எனவும், இன்றைக்கு மட்டும் 12,327 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 38 திருநங்கைகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருநங்கைகள் இன்று யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+