சென்னையில் கொரோனா உறுதியான தொழிலாளி.. திருப்பத்தூர் வந்தவரை காண மக்கள் கூடியதால் பரபரப்பு
சென்னை: சென்னையில் கொரோனா பாதித்த நபர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மிட்டூர் அருகேயுள்ள பலப்பல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (55). இவர் சென்னையில் கட்டுமான பகுதியில் வேலை செய்து வந்துள்ளார்.

அவருக்கு சென்னையில் கொரோனா ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியிருந்த நிலையில் நேற்று அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.

உடனடியாக குறிப்பிட்ட நபரை பல இடங்களில் தேடியும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. அவருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவருடைய சொந்த மாவட்டமான திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை திருப்பத்தூர் பஸ் நிலையம் வழியாக அவர் செல்வதை அறிந்து போலீசார் அவரை லாவகமாக பிடித்து வைத்து உடனடியாக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவல் காட்டு தீ போல் திருப்பத்தூர் நகரம் முழுவதும் பரவியது. தீடீரென அவரைப் பார்க்க பொதுமக்கள் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர் நடந்து சென்ற திருப்பத்தூர் நகர மெயின் ரோடு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

பிறகு மெயின் ரோடில் உள்ள பயணியர் விடுதி அருகே அவர் உட்கார வைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications