Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா டெஸ்ட்.. இந்தியா ரொம்ப மோசம்.. உலக அளவில் 115வது இடம்...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகின் பெரும்பாலான நாடுகளை ஒப்பிட்டால், இந்தியாவில் கொரோனா பரிசோதனை குறைவு என்கிறது புள்ளி விவரம். உலக நாடுகளில் 1 மில்லியன் பேரில் எத்தனை பேருக்கு டெஸ்ட் எடுக்கப்படுகிறது என்பதை வைத்து செய்யப்பட்ட ஒப்பீட்டை வைத்து பார்த்தால் இது உறுதியாக தெரிகிறது.

உதாரணத்திற்கு அமெரிக்காவை பாருங்கள். தினசரி 1,290,703 பரிசோதனைகள் செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் ஒரு மில்லியன் பேருக்கு சராசரியாக, 191,645 பரிசோதனைகள்தான் செய்யப்படுகிறது.

corona testing is less in India compared to most countries in the world

பிரான்ஸ் - 1,104,039 பரிசோதனைகள், பிரிட்டன்- 2,067,538 பரிசோதனைகள், ஜெர்மனி- 627,844 பரிசோதனைகள், கொலம்பியா- 269,809 பரிசோதனைகள்,
பெல்ஜியம்- 1,030,550 பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

நமது அண்டை நாடுகள் இந்த விஷயத்தில் சரியில்லைதான். பாகிஸ்தான்- 49,956 பரிசோதனைகள், இலங்கை- 110,526 பரிசோதனைகள்,
வங்கதேசம்- 31,146 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால், குட்டி நாடான சிங்கப்பூரில்- 1,535,041 பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

ஐரோப்பாவிலுள்ள குட்டி நாடான ஆஸ்திரியாவில் கூட சராசரியாக ஒரு மில்லியன் மக்களில் 3,185,907 பேருக்கு டெஸ்ட் எடுக்கப்படுகிறது.

கொரோனா பரிசோதனை அளவில் உலகிலேயே 115வது இடத்தைதான் பிடித்துள்ளது இந்தியா. மக்கள் தொகை அதிகம் என்பதால், ஒரு மில்லியன் பேருக்கு எத்தனை டெஸ்ட் எடுக்கப்படுகிறது என்ற அளவில், நமது நாடு ரொம்பவே கம்மியாக இருக்கிறது என்கிறார்கள். மக்கள் தொகை அதிகம் என்பதால், நோய் பரவல் வாய்ப்பு அதிகம் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. எனவே பரிசோதனை அளவை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+