மே 2ல் வாக்கு எண்ணிக்கை...முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் - சத்யபிரதா சாகு
மே 2ஆம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்கு என்னும் பணி தொடங்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். அதன் தொடர்ச்சியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளதாக தமிழக
சென்னை: வாக்கு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார். மே 2ஆம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்கு என்னும் பணி தொடங்கப்படும். அதன் தொடர்ச்சியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் பரவுவதற்கு தேர்தல் ஆணையமே காரணம் என்ற சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தினசரியும் 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் வரும் ஞாயிறு மே 2ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள், அதிகாரிகள் 72 மணிநேரத்திற்கு முன்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
14 மேஜைகள் அமைக்கப்பட்டு இந்த வாக்கு எண்ணிக்கையானது நடைபெறும். ஒவ்வொரு தொகுதிக்கும் ஏற்ப இந்த மேஜைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கையானது பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணக்கூடிய அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்திற்குள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுத்ததற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய பணியாளர்களுக்கும் இதே நிலை தான் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காலை 8 தபால் வாக்கு என்னும் பணி தொடங்கப்படும். அதன் தொடர்ச்சியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications