முதல்முறையாக.. கர்ப்பிணிகளுக்கு இலவச தடுப்பூசி.. புதுச்சேரியில் இன்று தொடங்கியது..!
கர்ப்பிணி பெண்களுக்கு புதுச்சேரியில் தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது
சென்னை: புதுச்சேரியில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று தொடங்கியது..!
புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது... ஆனாலும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை.

இந்த நிலையில் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என நோய் தடுப்புக்கான தேசிய குழு பரிந்துரைத்திருந்தது.. அதன் அடிப்படையில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதார அமைச்சகமும் ஒப்புதல் அளித்திருந்தது.
அதன்பேரில்தான், இன்று முதல் புதுச்சேரியில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் இன்று தொடங்கியது.. ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் இந்த முகாமை சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தொடங்கி வைத்தார்...
இதைபற்றி அவர் சொல்லும்போது, புதுச்சேரியில், படிப்படியாக அனைவருக்கும் தடுப்பூசி போட்டு வருகிறோம்.. இப்போது, கர்ப்பிணிகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக, பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு முதன் முதலாக கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். கர்ப்பிணிகளுக்கு ஊசி போடுவதால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
புதுச்சேரியில் இதுவரை 5.5 லட்சம் தடுப்பூசி போட்டுள்ளோம். இதில் எந்தவித பெரிய பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படவில்லை.. அதனால், கர்ப்பிணிகள் எந்தவித தயக்கமுமின்றி வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்... குழந்தைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்த பிறகே இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications