அடுத்தடுத்த வீடுகள்.. 2 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு கொரோனா.. அதிர்ந்த மயிலாப்பூர்.. என்ன நடந்தது?
சென்னை: மயிலாப்பூரில் ஒரே தெருவில் அடுத்தடுத்து உள்ள வீடுகளில் மொத்தம் 11 பேருக்கு கொரோனா ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் 103 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக இதுவரை கொரோனா காரணமாக 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினமும் ஏற்படும் கொரோனா கேஸ்களில் சென்னையில்தான் 90% கேஸ்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
சென்னையில்தான் தமிழகத்தில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2058 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

ஒரே தெருவில் கொரோனா
இந்த நிலையில் சென்னையில் மயிலாப்பூரில் ஒரே தெருவில் அடுத்தடுத்து உள்ள வீடுகளில் மொத்தம் 11 பேருக்கு கொரோனா ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு இருக்கும் குடிசை பகுதி ஒன்றில் இப்படி வரிசையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த குடிசை பகுதியில் 6 மாதம் குழந்தை ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் 1 வயது குழந்தை ஒன்றுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

மொத்தம் எத்தனை பேர்
இது போக மேலும் 10 பேருக்கு கொரானோ பாதிப்பு உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 பெண்கள் அடக்கம். இதன் மூலம் அந்த பகுதி மொத்தமாக ரெட் சோன் பகுதியாக மாறியுள்ளது. அங்கு இருக்கும் சாலைகள் எல்லாம் மூடப்பட்டுள்ளது. மொத்தமாக வீடு வீடாக உள்ள பகுதிகளில் சோதனைகள் செய்யப்பட உள்ளது. அங்கு கொரோனா அறிகுறி உள்ளவர்கள் 25 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை பாடிக்குப்பம்
நேற்று இதேபோல் சென்னையில் பாடிக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படடுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு அருகிலேயே உள்ளது. கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு சென்ற நபர் மூலம் இங்கு கொரோனா பரவி இருக்கலாம் அஞ்சப்படுகிறது. இங்குதான் அடுத்தடுத்து 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை காவல் நிலையம்
அதேபோல் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் காவல் நிலையத்தில் வரிசையாக இன்று 4 நான்கு காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்று காலை முதல்நிலை காவலருக்கும், உளவுத்துறை காவலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதை தொடர்ந்து மேலும் இரு காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications