அந்த 13 பேர்.. சென்னை தி நகரை அதிர வைத்த "கொரோனா கேம்".. ஒரே நாளில் பலர் பாதிக்கப்பட்ட பரிதாபம்!
சென்னை: சென்னையில் தி நகரில் இருக்கும் தர்மபுரம் பகுதியில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இவர்கள் எப்படி பாதிக்கப்பட்டனர் என்பது தொடர்பாக பரபரப்பு விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1982 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தம் 40698 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் சென்னையில் நேற்று மொத்தம் 1479 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்றுதான் இதுவரை இல்லாத மிக அதிகமாக கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. சென்னையில் மொத்தமாக 28924 கேஸ்கள் இதுவரை பதிவாகி உள்ளது.

சென்னை பாதிப்பு
இந்த நிலையில் சென்னையில் தி நகரில் இருக்கும் தர்மபுரம் பகுதியில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இவர்கள் எப்படி பாதிக்கப்பட்டனர் என்பது தொடர்பாக பரபரப்பு விவரங்கள் வெளியாகி உள்ளது. இவர்கள் எல்லோரும் விளையாட்டு ஒன்றின் மூலம் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆம் தர்மபுரம் பகுதியை சேர்ந்த இவர்கள் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கிறார்கள். எல்லோரும் 50 வயதுக்கும் குறைவானவர்கள்.

கொரோனா கேம்
இவர்கள் எப்போதும் ஓய்வு நேரத்தில் சீட்டு கட்டு, ரம்மி விளையாடுவது வழக்கம். அந்த வகையில் 5 நாட்களுக்கு முன் இவர்கள் ஒன்றாக சீட்டு கட்டு விளையாடி உள்ளனர். அதில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருக்கவே அவருக்கு நேற்று சோதனை செய்யப்பட்டது. அவருடன் ரம்மி விளையாடிய மற்ற 12 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் வெளியான முடிவுகள் அந்த தெருவையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது .

எல்லோருக்கும் வந்தது
அதன்படி அங்கு சீட்டு கட்டு விளையாடிய 13 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் எல்லோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் சிலர் 40 வயதுக்கும் குறைவான நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் எல்லோருக்கும் தற்போது தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த தெருவில் ஏற்கனவே 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி வந்திருக்கும்
அந்த தெருவை சேர்ந்த இந்த 5 பேருடன் 13 பேரில் ஒருவர் தொடர்பு கொண்டு இருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் மூலம் இவர்களுக்கும் கொரோனா வந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பெரிய அளவில் கொரோனா ஹாட்ஸ்பாட் உருவாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட இந்த 13 பேரின் உறவினர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications