சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு.. 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி.. மருத்துவமனைக்கு விரைந்தனர்!

அமெரிக்காவில் சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவில் சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    Corona Virus Symptoms | Precautions

    தமிழகத்தில் கொரோனா அச்சம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. உலகம் முழுக்க மொத்தம் 106065 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 3600 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி உள்ளனர். இந்தியாவில் 34 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் முதல் நபர் ஒருவருக்கு கொரோனா பரவி உள்ளது. இவருக்கு ஓமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பின் கொரோனா ஏற்பட்டுள்ளது.

    நேற்று எப்படி

    நேற்று எப்படி

    நேற்றுதான் இவருக்கு இந்த வைரஸ் தாக்கியது.இவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இவர் தொடர்பு கொண்ட நபர்களை எல்லாம் தற்போது சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த் நிலையில் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளது.

    சென்னை விமான நிலையம்

    சென்னை விமான நிலையம்

    இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய பயணிகள் எல்லோரும் சோதனை செய்ய்யப்பட்டார்கள். அங்கு நடந்த தெர்மல் சோதனையில் இந்த சிறுவனுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இந்த சிறுவன் நேரடியாக அமெரிக்காவில் இருந்து சென்னை வரவில்லை. இந்த விமானம் அமெரிக்காவில் இருந்து கத்தாரில் உள்ள டோஹா விமான நிலையத்திற்கு சென்றுள்ளது.

    பயணிகள் எப்படி

    பயணிகள் எப்படி

    அங்கு சில பயணிகளை ஏற்றிக்கொண்டு அதன்பின் சென்னை வந்துள்ளது.கத்தார், அமெரிக்கா இரண்டும் அதிக அளவு கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகள் ஆகும். இதனால் அந்த நாடுகளில் இருந்து வந்த நபர்கள் யாராவது இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு அதன்பின் இந்த சிறுவன் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது .

    சென்னை சென்றார்

    சென்னை சென்றார்

    விமான நிலைய மருத்துவக்குழுவினர் சிறுவனை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இந்த சிறுவனுக்கு அடுத்தகட்ட சோதனைகள் செய்யப்பட உள்ளது. இந்த சிறுவனின் பெற்றோரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் வைரஸ் அறிகுறி இருக்கிறதா என்று சோதனை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் சென்னையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+