ஒரு நபர்.. அடுத்தடுத்த 3 தெருக்கள்.. ஒரே நாளில் 18 கொரோனா கேஸ்கள்.. தேனாம்பேட்டையில் என்ன நடந்தது?
தேனாம்பேட்டையில் இருக்கும் அடுத்தடுத்த மூன்று தெருக்களில் ஒரே நாளில் 18 கொரோனா கேஸ்கள் ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: தேனாம்பேட்டையில் இருக்கும் அடுத்தடுத்த மூன்று தெருக்களில் ஒரே நாளில் 18 கொரோனா கேஸ்கள் ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா வேகமாக பரவ தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 104 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இன்றும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தமிழகத்தில் கொரோனாவால் மொத்தமாக 2162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தமாக 768 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

எங்கு எல்லாம் அதிகரிக்கும்
சென்னையில் அதிகமாக ராயபுரத்தில் 189 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. திருவிக நகரில் 169 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் 85 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 4 மண்டலங்கள் இதுதான். சென்னையில் கடந்த இரண்டு வாரமாக கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஒரே நாள்
இந்த நிலையில் தேனாம்பேட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்த மூன்று தெருக்களில் 18 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் தேனாம்பேட்டையில் கேஸ்களில் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. மாலை வெளியிடப்படும் பட்டியலில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். தேனாம்பேட்டை மண்டலத்தில் இருக்கும் மற்ற பகுதிகளின் கேஸ்களை சேர்த்தால் இன்னும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

எந்த தெருவில் இருக்கும் கேஸ்கள்
தேனாம்பேட்டையில் ஐஸ் ஹவுஸ் பகுதியில்தான் கொரோனா மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு இருக்கும் எல்லா தெருக்களிலும் கிட்டத்தட்ட கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆம் ஐஸ் ஹவுஸ் பகுதியில் இருக்கும் ஏறத்தாழ 90% தெருக்களில் கொரோன பரவி உள்ளது. இதனால் மொத்தமாக ஐஸ் ஹவுஸ் மூடப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் வி.ஆர்.பிள்ளை தெரு, முனுசாமி தெரு, கஜபதி தெரு ஆகிய தெருக்கள்தான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

எப்படி வந்தது
இந்த நிலையில் வி.ஆர்.பிள்ளை தெரு, முனுசாமி தெரு, கஜபதி தெருவில் இன்று மிக மோசமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் அங்கு 18 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்த தெருக்களில் ஒரே நாளில் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது பெரிய சர்ச்சையாகி உள்ளது. அங்கு ஏற்கனவே 13 பேருக்கு கொரோனா இருந்தது குறிப்பிடத்தக்கது.

காரணம்
இந்த நபர்கள் எல்லோருக்கும் அங்கு வசித்த ஒரே நபர் மூலம்தான் கொரோனா பரவி இருக்கிறது. சென்னை கே.கே.நகரில் உள்ள உள்ள மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் ஒருவர் இந்த பகுதியில் வசித்து வருகிறார். மெக்கானிக்காக இருக்கும் இவர் அந்த மூன்று தெருவை சேர்ந்த மக்களுக்கும் மிகவும் நெருக்கம். இவருக்கு கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

பலருக்கு பரவியது
இந்த நிலையில் இந்த நபர் யாரை எல்லாம் தொடர்பு கொண்டார் என்று காண்டாக்ட் டிரேஸ் செய்யப்பட்டது. இந்த காண்டாக்ட் டிரேஸ் சோதனையில் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் உள்ள 18 பேருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் எல்லோரும் அந்த மெக்கானிக் நபரை தொடர்பு கொண்டவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் அதே பகுதியில் பலரை சந்தித்து பேசி உள்ளதால் இன்னும் பலருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications