டெஸ்டிங்கை உயர்த்தினாலும்.. கட்டுக்குள் கொரோனா வைரஸ்.. தமிழகத்தில் இன்று 1685 பேர் பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 1685 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 766677 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.டெஸ்டிங் அதிகரிக்கப்பட்டாலும் பெரிய அளவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கவில்லை. இந்தியாவில் தமிழகத்தில் தினமும் அதிக அளவில் கொரோனா டெஸ்ட் நடக்கிறது.
ஆனாலும் டெல்லி, கேரளா போல அதிக அளவில் கேஸ்கள் பதிவாவது இல்லை. தமிழகத்தில் தினமும் 2000க்கும் குறைவாகவே கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது.

தமிழகம்
தமிழகத்தில் இன்று 1685 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 766677 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 13404 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 741705 பேர் இதுவரை தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று டிஸ்சார்ஜ்
2173 பேர் தமிழகத்தில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினமும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் இன்று 18 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 11568 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

சென்னை
சென்னையில் இன்று 489 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 210560 பேருக்கு சென்னையில் இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கோவையில் 147பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 47024 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டில் 125 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 46434 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட் எண்ணிக்கை
நேற்றை விட இன்று அதிக கொரோனா சோதனை செய்யப்பட்டாலும் கேஸ்கள் குறைவாக வந்துள்ளது. 11401239 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 68033 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று 67309 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 11116440 பேர் தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications